அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்

Jun 21, 2024, 11:31 AM IST

ஒட்டுமொத்த திருநெல்வேலியின் பெருமையாக கொண்டாடப்படும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டமானது திருநெல்வேலி மட்டுமல்லாது, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானபக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம். ஆகியாவிலேயே மிக அதிக எடை கொண்ட (450 டன்) திருதேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி தேரோட்ட திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது இன்று காலை வழக்கம் போல் கோலாகலமாகத் தொடங்கியது. ஆனால், தேர் இழுக்கப்பட்டு சில மணித்துளிகளிலேயே திருத்தேரின் 3 வடங்கள் அடுத்தடுத்து அறுந்து பக்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன.

International Yoga Day: ஈஷாவில் ஆதியோகி முன்பு நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் யோகா செய்து அசத்தல்

பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மீண்டும் தேர் இழுக்க தொடங்கப்பட்ட நிலையில் நான்காவது வடமும் அறுந்தது. முழுக்க முழுக்க மனித சக்தியை மட்டுமே கொண்டு இயக்கப்படும் இந்த பிரமாண்ட தேர் திருவிழாவில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு பெரும் அபசகுணம் என்று இந்துமுன்னணி அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Pournami: பவுர்ணமி கிரிவலத்துக்கு திருவண்ணாமலைக்கு போறீங்களா? பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

மேலும் தேரின் முன் பகுதியில் அமைந்துள்ள குதிரையும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரும்பு சங்கிலிகளைக் கொண்டு தேரை இழுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஒன்றுகூடி தேர் இழுக்கும் இந்த புனித விழாவில் வரலாற்றிலேயே முதல் முறையாக வாடிய முகத்தோடு பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.