Vijay : நண்பா.. நண்பீஸ் ரெடியா? மிரட்டும் அப்பா மகன் காம்போ.. VP வேற லெவல் நீங்க - GOAT பட Glimpse Video இதோ!

Jun 22, 2024, 12:14 AM IST

தளபதி விஜயின் GOAT படத்தில் இருந்து முதல் Glimpse வீடியோ வெளியாகியுள்ளது. இன்று விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அப்பா மகன் காம்போவில் வரும் காட்சிகள் வெறித்தனமாக உள்ளது என்றே கூறலாம். விஜய் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு உயர் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
தளபதி விஜய் முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். குறிப்பாக அவரது தம்பி பிரேம்ஜி அமரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் இன்று ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு தற்பொழுது ஒரு ஷார்ட் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த மெலடி பாடலை தளபதி விஜய் அவர்களோடு, AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த பிரபல பாடகி பவதாரணி அவர்களை பாட வைத்திருக்கின்றனர் பட குழுவினர். 

தனது தங்கையின் குரலில் இந்த பாடல் உருவாகி உள்ளதால், இது தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடலாக உள்ளது என்று இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இரட்டை வேடங்களில் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகிய இருவரும் அவருக்கு நாயகியாக நடித்து வருகின்றனர். 

முன்னணி நடிகர்கள் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் தளபதி விஜயின் நண்பர்களாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இனி, "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் குறித்த தகவல்கள் மற்றும் அப்டேட் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.