Latest Videos

உங்களுக்கு இந்த மாதிரி 4 அறிகுறிகள் இருக்கா..? அது நிச்சயம் வயிற்று புற்று நோய் தான்... ஜாக்கிரதை!

By Kalai SelviFirst Published Jun 22, 2024, 10:53 AM IST
Highlights

வயிற்று புற்று நோய் என்பது யாரையும் தாக்கக்கூடிய ஒரு தீவிரமான புற்றுநோய் ஆகும். இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் அதன் தீவிரத்தை தடுக்கலாம். இப்போது அதன் ஆரம்ப அறிகுறிகள் சிலவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் மக்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு தீவிர நோய். இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இந்த நோய் உலக அளவில் கவலைக்குரிய விஷயமாக இருப்பதற்கு இதுவே காரணம். 

பல வகையான புற்று நோய்கள் உள்ளன. அவை உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படலாம். வயிற்று புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும். இது ஒரு தீவிர வகை புற்றுநோயாகும். இது இறப்பை புற்று நோய் என்றும் அழைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் அது தீவிரமடைவதை தடுக்கலாம்.

இதையும் படிங்க:  கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இளம்பெண் மரணம்.. அதன் அறிகுறிகள் என்ன? நோயை எப்படி தடுப்பது?

வயிற்றுப் புற்றுநோய் என்றால் என்ன?:
பொதுவாக உங்கள் வயிற்றின் உள்புறத்தில் புற்றுநோய் செல்கள் தொடங்கும் போது வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்று நோய்கள் வளரும்போது அவை உங்கள் வயிற்றின் சுவர்களில் ஆழமாக நகருகின்றன. மேலும், இது வயிற்றுடன் உணவு குழாய் அல்லது இரைப்பையை சந்திக்கும் பகுதியையும் பாதிக்கிறது.

இதையும் படிங்க: வாய்வழி செக்ஸால் அதிக ஆபத்து.. தொண்டை புற்றுநோய் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல்..

வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள்:

நிபுணர்களின் கூற்றுப்படி, திடீர் எடை இழப்பு மற்றும் வயிற்று வலி போன்ற வயிற்றுப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆனால், ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் இது தெரிவதில்லை. மேலும், இந்த புற்றுநோய் முகத்தில் தெரியும் தோல் பிரச்சனைகளுடனும் தொடர்புடையது. இது இந்த நோயின் ஆரம்ப கட்டங்களில் ஒன்றாகும். மேலும், அதன் சில முக்கிய அறிகுறிகள் பின்வரும் அடங்கும்..

இரத்த வாந்தி: நீங்கள் வாந்தி எடுக்கும்போது ரத்தமும் கலந்து வந்தால் ஒருபோதும் அதை புறக்கணிக்காதீர்கள். மேலும், சில சமயங்களில் தும்மல் அல்லது இருமலின் போதும் கூட இரத்தம் வந்தால் உடனே மருத்துவரை சந்தித்த ஆலோசனை பெறுவது நல்லது.

செரிமான பிரச்சனை: வயிறு புற்று நோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் செரிமான பிரச்சனை. ஆம்,நீங்கள் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. இல்லையெனில், கடினமான சூழ்நிலைகளை கையாளுவது மிகவும் கடினம்.

தொண்டைப்புண்: தொண்டைப்புண், வயிற்றுப் புற்று நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். எனவே, இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் அதை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்காமல், நிலைமை மோசமாக படி, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மலம் கருப்பாக இருக்கும்: மலம் கருப்பு நிறத்தில் வெளியேறினால் அது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்த மாதிரி எப்போதாவது உங்களுக்கு நடந்தால், காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவர் அணுகி, பிரச்சனையை சரி செய்யுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!