Asianet News TamilAsianet News Tamil

வாய்வழி செக்ஸால் அதிக ஆபத்து.. தொண்டை புற்றுநோய் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல்..

மருத்துவர்களின் கூற்றுப்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக தொண்டை புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. 

Is oral sex a high risk factor for throat cancer shocking information Rya
Author
First Published Nov 21, 2023, 7:21 PM IST | Last Updated Nov 21, 2023, 7:21 PM IST

வாய்வழி அல்லது தொண்டை புற்றுநோய் என்பது உங்கள் தொண்டை அல்லது குரல் பெட்டியில் உருவாகும் புற்றுநோயைக் குறிக்கிறது. இந்த புற்றுநோய் பெரும்பாலும் உங்கள் தொண்டையின் உள்ளே இருக்கும் தட்டையான செல்களில் தொடங்குகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக தொண்டை புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. 

தொண்டை புற்றுநோயில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது எச்பிவியால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன, இது கர்ப்பப்பை வாய் மற்றும் ஆசனவாய் புற்றுநோய்களையும் ஏற்படுத்துகிறது. மேலும் தொண்டை புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு வாய்வழி செக்ஸ் காரணம் என்று பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாய்வழி உடலுறவு உட்பட எந்தவொரு நெருக்கமான தொடர்பிலிருந்தும் HPV வைரஸ் பரவலாம் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். HPV வைரஸ், பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் மாற்றங்களைத் தூண்டி, அதன் மரபணுப் பொருளைப் புற்றுநோய் உயிரணுக்களின் பகுதியாக மாற்றி, அவை வளரச் செய்யும். அமெரிக்கா முழுவதும் தொண்டைப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் HPV வைரஸால் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட உலகெங்கிலும் உள்ள 3 ஆண்களில் 1 பேர் குறைந்தது ஒரு பிறப்புறுப்பு HPV வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 5 இல் 1 பேர் அதிக ஆபத்து என அறியப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றால் HPV வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், 3,40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

வாய்வழி செக்ஸ் பாதுகாப்பானதா?

வாய்வழி செக்ஸ் என்பது தங்கள் பிறப்புறுப்பு அல்லது பிறப்புறுப்பு பகுதியைத் தூண்டுவதற்கு வாயைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. புற்றுநோய் தவிர வேறு சில ஆபத்துகளும் இந்த வாய்வழி செக்ஸ் காரணமாக ஏற்படுகிறது. குறிப்பாக சிபிலிஸ், கிளமிடியா, கோனோரியா போன்ற பாலியல் நோய்கள் ஏற்படுகின்றன.

தடுப்பூசிகள் HPV தொடர்பான தொண்டை புற்றுநோய்க பாதிப்பை குறைக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 12 வயதிற்குள் HPV தடுப்பூசியின் இரண்டு இரண்டு டோஸ்களை எந்த விதமான தொற்று அல்லது வியாதியையும் தடுக்க அனைவருக்கும் பரிந்துரைக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கு HPV மிகவும் பொதுவானது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடுவது முக்கியம் அறிவுறுத்தப்படுகிறது.

தொண்டை புற்றுநோயின் அறிகுறிகள்

HPV-யுடன் தொடர்புடைய தொண்டைப் புற்றுநோயானது ஐம்பது வயதிற்குட்பட்டவர்களை மிகவும் பொதுவாக பாதிக்கிறது என்றாலும், பல ஆண்டுகளுக்கு பிறகு புற்றுநோய் உருவாகிறது. கழுத்தில் வலியற்ற கட்டி, காது வலி., உணவு விழுங்கும் போது வலி, உணவு தொண்டையில் ஒட்டிக்கொண்டது போன்ற உணர்வு ஆகியவை தொண்டை புற்றுநோயின் சில அறிகுறிகளில் அடங்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios