கள்ள உறவு வைத்துக் கொள்வதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.
நீங்கள் ஏற்கனவே உறவில் உள்ள நபருக்கு தெரியாமல் மற்ற நபருடன் கொள்ளும் உறவு தான் கள்ள உறவாகும். சில தங்களுடைய எதிர்பார்ப்பை துணை நிறைவு செய்யாவிட்டாலும், அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தராவிட்டாலும் அந்த உறவை விட்டு விலக வேண்டும் என கருதுகிறார்கள். சிலர் இந்த காரணங்களுக்காக வேறு ஒருவருடன் உறவு கொள்ள துணிகிறார்கள். பெரும்பாலான கள்ள உறவுகளின் தொடக்கம் இப்படித்தான் இருக்கிறது. இது தவிர இந்த உறவு ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான சிந்தனைகளை கொண்டிருப்பதில்லை. பெண்களுக்கு உணர்வுரீதியான தேவைகள் எப்போதும் அதிகம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆண்களுக்கு காதல், காமம் இரண்டும் தனித்தனியான விஷயங்கள். அவர்கள் அதை குழப்பிக் கொள்வதில்லை. ஆனால் பெண்களுக்கு காதல், காமம் அனைத்தும் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்தது.
இதையும் படிங்க: பெண்களே! உங்கள் வருங்கால கணவரை பற்றிய இந்த 5 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
பெண்கள் காதலையும், காமத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களுடைய உணர்வுகளுடன் பாலியல் உறவுகள் பொருந்தவில்லை என்றால் அந்த உறவிலிருந்து வெளியேற துடிப்பார்கள். பொதுவாக கள்ள உறவுகளின் நோக்கம் என்பது வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வருவது கிடையாது. திருமணம் முறையில் திருப்தி இல்லாத பெண்களும் ஆண்களும்தான் இந்த உறவை அதிகம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மனிதர்களை சந்திக்கும் போது அவர்களை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று மனம் அலைபாயும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உங்களுடைய காதல் தேர்வுகள் எப்போதும் சிறு வயதில் உங்களை அதிகம் தொட்டு தழுவிய நபர்களின் சாயலில் தான் இருக்கும். உதாரணமாக பெண்களில் சிலருக்கு அப்பா, தாய்மாமா சாயல் கொண்ட நபர்கள் மீது ஈர்ப்பு வரும். அதனை காதல் என நினைத்து அவருடன் நெருங்கிவிடுவார்கள்.
இதையும் படிங்க: Relationship Tips : வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!
இந்த உறவுகளை தடுப்பது ஒவ்வொருவருடைய சுய கட்டுப்பாட்டின் மூலம் தான் முடியும். எப்போதும் ஒரு விஷயத்தை விட இன்னொரு விஷயம் சிறந்ததாக தோன்றும் எண்ணம் மனிதனுக்கு இயல்பானது தான். ஆனால் உங்களுடைய வாழ்க்கை துணைக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய சுய சிந்தனையை கொண்டிருந்தால், இந்த பிரச்சினையை குறைக்கலாம். அறிவார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுதான் உங்களை கள்ள உறவிலிருந்து காப்பாற்றும். மனம் சொல்வதை கேட்காதீர்கள்.
கள்ள உறவுகள் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தாலும் அது திருமண உறவில் உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். மனதளவில் உங்களை பாடாய்ப் படுத்தும். ஒருவேளை உங்களுக்கு கள்ள உறவு ஏற்பட்டால் அதை ஒரு அனுபவப்பாடமாக எடுத்துக்கொண்டு கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுடைய எதிர்காலத்துக்கு நன்மை செய்யும். எந்த உறவுக்கும் நேர்மை முக்கியம். கவனமாக இருங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D