இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் கூட மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர் அவர்களுக்கான ஒரு சூப்பரான மூலிகை டீ இங்கே..
இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் கூட மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறைதான். நீங்க எப்படி வாழ்கிறீர்கள்.. எப்படி சாப்பிடுகிறீர்கள்.. இவை அனைத்தும் மூட்டுகளைப் பாதிக்கிறது. மூட்டு வலிக்கு தவறான உணவு மிகவும் முக்கிய காரணம். உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே இல்லாததால் மூட்டு வலி ஏற்படுகிறது. காயங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு, விளையாட்டு மோசமான உட்காரும் தோரணை மற்றும் சில மருத்துவ நிலைகள் போன்றவற்றாலும் மூட்டு வலி ஏற்படலாம்.
எனவே, இதற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் எலும்பு சூப் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் குரு தழும்புகளுக்கு அவை மிகவும் நன்மை பயக்கும். மேலும், இந்த வகை உணவை உட்கொள்வதன் மூலம் மட்டுமே மூட்டு வலி மற்றும் வீக்கத்தை எளிதில் குறைக்க முடியும்.
மூட்டு வலி ஏற்படும்போது பெரும்பாலானோர் நடை பயிற்சியை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால், இது தவறு. தொடர்ந்து எந்த விதமான பயிற்சி ஏதும் செய்யாமல் இருந்தால் மூட்டுகளில் எரிச்சல், கடுமையான வலி அதிகரிக்கும். எனவே, மூட்டுகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அந்த வகையில், சில மூலிகைப் பொருட்களை தண்ணீரில் கலந்து டீயாக குடித்தால் மூட்டு வலி பறந்து போய்விடும். அந்த மூலிகை டீ செய்வதற்கான பொருட்கள் என்னென்ன அது எப்படி செய்வது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
இதையும் படிங்க: இளைஞர்களுக்கு மூட்டுவலி ஏன் வருகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..!!
மூலிகை டீ தயாரிப்பது எப்படி?:
மஞ்சள் மற்றும் இஞ்சி அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. எனவே, இவற்றை கொண்டு டீ தயாரிக்க ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி, ஒரு துண்டு மஞ்சள் அல்லது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு, உங்களுக்கு சர்க்கரை நோய் இல்லை என்றால், நீங்கள் ஒரு ஸ்பூன் தேனையும் பயன்படுத்தலாம்.
இந்த ஹெர்பல் டீயை தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்த இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து குனிந்திட்டியில் வைத்து கொதிக்க வைத்து கீழே இறக்கிவிடுங்கள். பிறகு அதில் கருப்பு மிளகு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இந்த டீ மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். இந்த டீயை ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.
இதையும் படிங்க: தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!
மூலிகை டீயின் நன்மைகள்:
மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியில் தசை மற்றும் மூட்டு வலியை போக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் ஒரு மசாலா இது இதிலும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் உள்ள உடைந்த செல்கள் சரி செய்வதுடன் எந்தவித தொற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது. அதுபோல, கருப்பு மிளகு வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. இதுவும் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D