Latest Videos

Kottai Pakku Benefits : உங்களுக்கு அதிக பி.பி, சுகர் இருக்கா..? கொட்டைப்பாக்கை இப்படி யூஸ் பண்ணுங்க..

By Kalai SelviFirst Published Jun 21, 2024, 11:01 AM IST
Highlights

கொட்டைப்பாக்கின் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது என்று நம் அனைவரும் அறிந்தது. ஆனால், உண்மையில் கொட்டைப்பாக்குகளில் பல மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

ஆம், பாக்கு உண்மையில் பல கடுமையான நோய்களை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. விலை உயர்ந்த மருந்துகள் கூட பலனளிக்காத நோய்களுக்கு இந்த பாக்கு ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. இதனால்தான் நம்முடைய முன்னோர்கள் இதை வெற்றியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தனர். இன்றைக்கும் கூட சில சுப விசேஷங்களை இந்த கொட்டைப்பாக்கு வழங்குகிறார்கள். இப்போது இதனுடைய தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Betel Leaf : வெற்றிலை புற்றுநோய் வராமல் தடுக்குமா..? உண்மையை ஆராயலாம் வாங்க!

கொட்டைப்பாக்கு நன்மைகள்:

கிருமிகளை அழிக்க:
கொட்டைப்பாக்கு இரைப்பையில் உள்ள கிருமிகளை நீக்கும். ஆனால், இதை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், ரத்தசோகை வரும்.

பற்களுக்கு:
அதுபோல இந்த கொட்டை பாக்கு பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதற்கு இந்த பாக்கை பொடியாக்கி அதை கொண்டு பற்களை மசாஜ் செய்வதன் மூலம் பல் நோய்கள் குணமாகும் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கீழ்வாதம் மூட்டு வலி:
நீங்கள் கீழ்வாதம் மூட்டு வலிகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், இதை எடுத்துக் கொள்வது நல்லது. இது உங்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஏனெனில், இது ஒரு வழி நிவாரணியாக செயல்படுகிறது மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை குறைத்து எலும்பு தொடர்பான பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. ஆனால் இதை அளவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: உங்கள் கூந்தல் கட்டுக்கடங்காமல் வளர இந்த ஒரு இலையில் ஹேர் மாஸ்க் போடுங்க..

உயர்த்த இரத்த அழுத்த பிரச்சனை:
நீங்கள் உயர்த்த இரத்த அழுத்த பிரச்சனையால் போராடுகிறீர்கள் என்றால் கொட்டைப்பாக்கை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த  பெரிதும் உதவுகிறது. ஆனால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அதை உட்கொள்ளுங்கள்..

தாம்பத்தியம் நன்றாக இருக்க:
முக்கியமாக, கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்க கூட இந்த பாக்கு உதவுகிறது தெரியுமா..? ஆம்.. உண்மையில், இந்த கொட்டை பாக்கு உடன் கானா வாழக்கீரை சேர்த்து சாப்பிட்டால் தாம்பத்தியம் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஆனாலும், இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு:
கொட்டை பாக்கில் தயாரிக்கப்படும் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, அசிடிட்டி வாயு தொந்தரவு, கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த டீ நல்ல பலன் அளிக்கும். ஆனால், இதை அடிக்கடி எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், பக்க விளைவுகள் சந்திக்க நேரிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!