உங்கள் கூந்தல் கட்டுக்கடங்காமல் வளர இந்த ஒரு இலையில் ஹேர் மாஸ்க் போடுங்க..
முடி பராமரிப்பில் வெற்றிலையின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முடியை இயற்கையாகவே ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றுவதற்கு பெரும்பாலான பெண்கள் பல வகையான பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்துகின்றனர். மேலும்,முடி பராமரிப்பில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தவே பலர் விரும்புகிறார்கள்.
அந்தவகையில், வெற்றிலையைப் பயன்படுத்துவது உங்கள் தலைமுடிக்கு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா..? ஆம்.. வெற்றிலையை தலை முடி பராமரிப்பில் பயன்படுத்துவதன் மூலம், கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து ஒரு நொடியில் விடுபடலாம்.
பொதுவாகவே, வெற்றிலையை பூஜைக்கும், மருத்துவ போன்றவற்றிற்கு தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இது முடியை ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம், இதில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே முடி பராமரிப்பில் வெற்றிலையின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முடி உதிர்வை கட்டுப்படுத்தும்: முடி உதிர்வதை தடுக்க வெற்றிலையை பயன்படுத்துங்கள். இதற்கு, 4-5 துளசி இலைகள், 2-3 செம்பருத்தி இலைகள் மற்றும் 5-6 வெற்றிலைகளை நன்கு கழுவி அரைக்கவும். பிறகு, இதனுடன் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
முடி வளர்ச்சி அடைய: முடி நீளமாக வளர, 3-4 வெற்றிலையை நன்கு கழுவி அரைக்கவும். பிறகு, இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, உச்சந்தலையிலும் முடியிலும் தடவி, 1 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
இதையும் படிங்க: 30 நாட்களில் உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளர 'இத' பண்ணுங்க!
முடி வலுவாக்க: வெற்றிலையில் உள்ள அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வேர்களில் இருந்து முடியை வலுவாக்க பெரிதும் உதவுகிறது. அதே சமயம், வெற்றிலை ஹேர் மாஸ்க் போடுவதினால், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இதையும் படிங்க: தலைமுடிக்கு மருதாணி யூஸ் பண்றீங்களா..? அப்ப முதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
ஒட்டும் தன்மையை நீக்க: முடியின் ஒட்டும் தன்மையை நீக்க வெற்றிலை உதவும். இதற்கு, வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பிற்கு, தலைக்கு குளிர்ந்த பிறகு, இந்த நீரால் முடியைக் கழுவவுங்கள். இது முடியின் ஒட்டும் தன்மையை போக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D