என்ன வீட்டிற்கு வந்த பூரானை கொல்லக் கூடாதா..? ஏன் அப்படி தெரியுமா..?

By Kalai SelviFirst Published Jun 20, 2024, 1:26 PM IST
Highlights

பூரானை அடித்துக் கொல்லக்கூடாது என்று பலர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.? அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டிற்கு வந்து அடிக்கடி தொந்தரவு செய்யும் விஷப்பூச்சிகள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பூரான். இந்த பூச்சி பல கால்களுடனும், தட்டையாகவும் இருக்கும். இது ஒரு வகையான விஷ பூச்சி என்றே சொல்லலாம்.  இந்தப் பூச்சி மனிதர்களை கடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றால், கண்டிப்பாக இல்லை. ஏனெனில், இதில் சிறிதளவு மட்டுமே விஷம் உள்ளது. ஆனால், இது கடித்த இடத்தில் சிவந்து இருக்கும், வலி, எரிச்சல் ஆகியவை மட்டுமே ஏற்படும். அதுமட்டுமின்றி, இந்த பூச்சி கடித்தால் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அப்படிப்பட்டவர்கள் மட்டும் மருத்துவர் அணுகுவது நல்லது.

அதுபோல, வீட்டில் பூரான் வந்தால் அது வீட்டில் உள்ளவர்களுக்கு ஏராளமான கஷ்டங்களை தரும் என்று நம்புகிறது. முக்கியமாக, வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்த இடம் என்பதால், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்கள் வீடு சுத்தமாக இல்லை என்றால், விஷ ஜந்துக்கள் கண்டிப்பாக வரும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Latest Videos

அந்த வகையில் பலரது வீட்டுக்கு குளியலறையில் அடிக்கடி பூரான் தொல்லை இருக்கும். ஆனால் அப்படி வரும் பூரானை அடித்துக் கொல்லக்கூடாது என்று பலர் சொல்லி இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.? அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? அப்படி, வீட்டிற்கு வரும் பூரான் வருவது நல்லதா..? கெட்டதா..? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிற்கு பூரான் வருவதற்கு முதற்காரணம் எதுவென்றால், நம் வீட்டை சுற்றி இருக்கும் சேரும் சகதியும் தான். ஏனெனில், இப்படி அசுத்தங்கள் நிறைந்த இடத்தில் தான் பூரான்கள் வசிக்கும். எனவே, உங்கள் வீட்டை சுத்தி எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, கழிவறை, குளியலறையை வாஷ்பேஷன், சிங் போன்ற இடங்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

அதுமட்டுமின்றி, பூரான் வருவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், அதுவும் நம் வீட்டை சுத்தப்படுத்த எச்சரிப்பதற்காகவே வருகிறது. ஏனெனில், விஷப்பூச்சி தான் பூரானின் உணவு விஷ பூச்சிகள். அவை எங்கு இருக்கிறதோ அங்கு தான் பூரான் இருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் பூரானை பார்த்தவுடன் அதை கொன்று விட்டால், விஷ பூச்சியின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் பூரானை கொல்லக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.

click me!