இந்த பதிவில் கோதுமை மாவில் போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். அதுவும் குறிப்பாக, தினமும் விதவிதமான ஸ்னாக்ஸ் தான் சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் பல பெற்றோர்கள் கடைகளில் பஜ்ஜி, வடை போன்றவற்றை வாங்கி கொடுப்பார்கள். ஆனால், அவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு. எனவே, உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான முறையில், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் கோதுமையில் போண்டா செய்து கொடுங்கள்.
பொதுவாகவே, நாம் கடலை மாவில் தான் போண்டா செய்வோம். ஆனால், இந்த கோதுமை மாவில் செய்யும் போண்டா சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும் மற்றும் எளிதில் செய்து விடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில், கோதுமை மாவில் போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடத்தில் மொறு மொறு வெங்காய வடை.. இப்படி செஞ்சு அசத்துங்க!
கோதுமை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: உருளைக்கிழங்கில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இப்படி செஞ்சு அசத்துங்க.. ரெசிபி இதோ!
செய்முறை:
கோதுமை போண்டா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, புதினா துருவிய இஞ்சி, பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி போண்டா பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்த மாவில் இருந்து போண்டா சுடுவதற்கு சின்ன சின்ன உருண்டையாக எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள். போண்டா நல்ல பொன்னிறமாக மாறியதும், அதை எண்ணெயிலிருந்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான கோதுமை போண்டா ரெடி! நீங்கள் விரும்பினால் இந்த போண்டா உடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D