செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான சுவையில் நண்டு குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் உங்கள் வீட்டில் நண்டு குழம்பு செய்து இருக்கிறீர்களா..? அப்படி செய்திருந்தாலும் செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..? இல்லை என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. செட்டிநாடு நண்டு குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த நண்டு குழம்பு செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது.
இந்த நண்டு குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, நன்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!
நண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
நண்டு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பூண்டு - 5
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: குடைமிளகாயில் ஒருடைம் இப்படி சாதம் செய்யுங்க.. செம ருசியாக இருக்கும்!
செய்முறை:
செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த நண்டை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளுங்கள். பிறகு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்த சீரகம் சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்து, அவற்றின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் கழிவு வைத்தல் நண்டை சேர்த்து மூடி வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் நண்டை வைக்கவும். நண்டு நன்றாக வெந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி தூவி இறக்கினால் காரசாரமான சுவையில் செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு ரெடி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D