Ven Pongal : ஒருமுறை வெண்பொங்கல் இந்த மாதிரி செய்ங்க.. சுவை வேற லெவல் இருக்கும்!

Published : Jun 19, 2024, 08:00 AM IST
Ven Pongal : ஒருமுறை வெண்பொங்கல் இந்த மாதிரி செய்ங்க.. சுவை வேற லெவல் இருக்கும்!

சுருக்கம்

இந்த கட்டுரையில் சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தினமும் காலையில் உங்கள் வீட்டில் இட்லி தோசையா..? இவற்றை சாப்பிட்டு போரடித்து விட்டதா..? அப்படியானால் வெண்பொங்கல் செய்து சாப்பிடுங்கள். வெண்பொங்கல் தென்னிந்தியாவில் பாரம்பரிய உணவுகளை ஒன்றாகும். சமச்சீரான சத்துக்கள் நிறைந்த இந்த வெண்பொங்கல் பலருக்கும் ரொம்பவே பிடித்த காலை உணவாகும். நீங்கள் செய்யும் வெண்பொங்கல் சுமாராக இருக்கும் என்றால் ஒரு முறை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள படி செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: Ragi Idli : ராகி இட்லியில் அப்படி என்னதான் சத்து இருக்கு; செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்துருவீங்க!!

வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2கப்
பாசிப்பருப்பு - 1/2கப்
நெய் - 3 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
முந்திரி - 10
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுபைக்கு ஏற்ப
தண்ணீர் - 4 கப்

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான மொறு மொறு தோசை.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி கேட்பாங்க..

செய்முறை:

  • வெண்பொங்கல் செய்ய முதலில், எடுத்து வைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக தண்ணீர் கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். 
  • பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், நாலு கப் தண்ணீர் சேர்த்து அது ஊற வைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும். பின் அதில் சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து 40 நிமிடங்கள் வேக வையுங்கள்.
  • மறுபுறம் அடுப்பில் ஒரு கடையை வைத்து நெய் ஊற்றி சூடானதும், அதில் மிளகு மற்றும் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்த இஞ்சியும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக அதில் கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் அவற்றை அப்படியே தயார் அனுப்புங்களில் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வெண்பொங்கல் ரெடி..! அவ்வளவுதான் இதனுடன் சாம்பார், தேங்காய் சட்னி, உளுந்த வடை வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவல்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Coconut Oil: இரவில் தூங்கும் முன் காலில் தேங்காய் எண்ணெய்! தினமும் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?
Crispy Dosa Recipe: வீட்லயே மொறுமொறுனு தோசை சுடுவது எப்படி..? சிம்பிள் டிப்ஸ்..!