ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக முதலில் நடிக்க இருந்தது சன் டிவி சீரியல் ஹீரோயினா? இது தெரியாம போச்சே.!

First Published Feb 27, 2024, 8:30 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல சன் டிவி.. சீரியல் நடிகை மிஸ் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Director Nelson

நடிகை நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே தரமான வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'டாக்டர்' திரைப்படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
 

இந்த படத்தை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து, நெல்சன் திலீப் குமார் இயக்கிய 'பீஸ்ட்' மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், படு தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பின்னர் எப்படியும் ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில், தலைவர் ரஜினிகாந்தை வைத்து, நெல்சன் திலீப் குமார் இயக்கிய திரைப்படம் தான் 'ஜெயிலர்'.

தனுஷின் 'ராயன்' படத்தில் பிக்பாஸ் பிரபலம்! மிரட்டலான லுக்கில் வெளியான புதிய போஸ்டர்!
 

ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரம்யா கிருஷ்ணா நடித்திருந்தார். மேலும் ரஜினிகாந்துக்கு மகனாக வசந்த் ரவியும், மருமகளாக மிர்ணாவும் நடித்திருந்தனர். பேரனாக யூடியூப் பிரபலமான ரித்விக் நடித்திருந்தார். 

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், விநாயகன், யோகி பாபு, மாரிமுத்து, சுனில், தமன்னா, சரவணன், அறந்தாங்கி நிஷா, போன்றோர் நடிக்க... கேமியா ரோலில் சிவராஜ் குமார், மோகன் லால், ஜாக்கி ஷெரிப், நாக பாபு, உதய் மகேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. 

Malavika Mohanan Photos: மாப்பிள்ளை தான் மிஸ்ஸிங்.! மணமகளாக மாறி.. மனதை வருடும் மாயக்காரி மாளவிகா மோகனன்!
 

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிகாந்தின் மருமகளாக... அதாவது மிர்ணா நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது, பிரபல சன் டிவி சீரியல் ஹீரோயின் தானாம். சீரியல் மற்றும் படத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் இருந்ததால், சீரியலை விட்டு விலக மனம் இல்லாமல், இந்த பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.
 

அவர் வேறு யாரும் இல்லை. சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் நாயகியாக நடித்து வரும், சைத்ரா ரெட்டி தான். ஒரே வேலை இந்த படத்தில் இவர் நடித்திருந்தால்... அவருக்கு இது சிறந்த அறிமுக படமாக அமைத்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Madhubala: 'ரோஜா' படத்திற்கு பின் மதுபாலாவுக்கு வாய்ப்பு கொடுக்காத மணிரத்னம்! காரணம் இந்த கெட்ட பழக்கம் தானாம்

click me!