Shamlee : இவங்ககிட்ட இப்படி ஒரு திறமையா? வேற லெவல்.. Wow என்று அனைவரையும் பாராட்ட வைத்த அஜித்தின் மச்சினிச்சி!

Ansgar R |  
Published : May 07, 2024, 09:22 PM IST
Shamlee : இவங்ககிட்ட இப்படி ஒரு திறமையா? வேற லெவல்.. Wow என்று அனைவரையும் பாராட்ட வைத்த அஜித்தின் மச்சினிச்சி!

சுருக்கம்

Actress Shamlee : கேரளாவில் பிறந்து, குழந்தை நட்சத்திரமாகவே பல வருடங்கள் இந்திய திரை உலகில் பயணித்து, மிகப் பெரிய புகழைப் பெற்ற நடையை தான் ஷாமிலி.

பேபி ஷாமிலிக்கு கோலிவுட் உலகில் அறிமுகம் தேவையில்லை, 1987 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த ஷாமிலி. தனது இரண்டாவது வயது முதல் நடித்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ராஜ நடை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார். 

பேபி ஷாம்லிக்கு மிகப்பெரிய அளவில் புகழைத் தேடித் தந்த திரைப்படம் என்றால் அது 1990 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "அஞ்சலி" என்கின்ற திரைப்படம் தான். இந்த படத்தில் நடித்ததற்காக தனது மூன்றாவது வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை ஷாமிலி வென்றார். 

வேகமாக ரூ.1000 கோடி வசூலை எட்டி.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த டாப் 5 படங்கள்..

அதுமட்டுமல்லாமல் அஞ்சலி படத்திற்காக தமிழக அரசு வழங்கும் மாநில விருதும் அந்த ஆண்டு அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 2000வது ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அவரது திரை பயணத்தில் ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார். 

இறுதியாக கடந்த 2000வது ஆண்டு பிரபல நடிகர் மம்மூட்டி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்கின்ற திரைப்படத்தில் இறுதியாக அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு பல ஆண்டுகள் சினிமா துறை பக்கம் வராமல் இருந்த அவர் மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்தார். 

இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பிற்கு முழு ஓய்வு கொடுத்த ஷாம்லி கடந்த சில காலமாகவே தன்னில் ஒளித்து வைத்திருந்த ஒரு திறனை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். நடிகை ஷாமிலி மிகச் சிறந்த முறையில் ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர் என்பதை அவர் தற்பொழுது நிருபித்து வருகிறார். 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் ஓவியங்கள் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. பிரபல நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினியின் இளைய சகோதரி ஷாமிலி என்பது அனைவரும் அறிந்தது.

குழந்தைகள் விஷயத்தில் சவால் விட்டு சிக்கிய எழில்.! அசிங்கப்பட்டது தான் மிச்சம்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!