Shakeela : நீங்க ரேப் சீனில் நடிச்சதே இல்லையா? பயில்வானை லெப்ட் ரைட் வாங்கிய ஷகிலா - அவர் ரியாக்ஷன் என்ன?

Ansgar R |  
Published : May 07, 2024, 08:27 AM IST
Shakeela : நீங்க ரேப் சீனில் நடிச்சதே இல்லையா? பயில்வானை லெப்ட் ரைட் வாங்கிய ஷகிலா - அவர் ரியாக்ஷன் என்ன?

சுருக்கம்

Shakeela Slams Bayilvan : சினிமா துறையில் பிரபலமாக உள்ள நடிகர், நடிகைகளை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதில் பயில்வான் ரங்கநாதனுக்கு நிகர் அவரே.

இந்நிலையில் அவரும் நடிகை சகிலாவும் ஒரு நேர்காணலில் சந்தித்துள்ளனர், பிரபல நடிகை குயிலி தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் மற்றும் நடிகை சகிலா ஆகிய இருவரும் பங்கேற்றனர். ஏற்கனவே பயில்வனின் மகள் குறித்து ஷகிலா பேசிய சில விஷயங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த நேர்காணலும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. 

நிகழ்ச்சி தொடங்கியதும் பேச ஆரம்பித்த நடிகை சகிலா, பைல்வான் ரங்கநாதனை அண்ணன் என்று அழைத்தாலும், சரமாரியான கேள்விகளை முன் வைத்தார். நடிகைகள் குறைந்த அளவிலான ஆடைகள் அணிந்தால் உங்களுக்கு என்ன? அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என்ற கேள்வியை பயில்வான் முன் வைக்க.. அப்படி என்றால் நடிகைகள் அவ்வாறு கவர்ச்சியாக ஆடை அணிந்து வருவதை நீங்கள் வரவேற்கிறீர்களா? என்று பதில் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.

Nikki Galrani : கருப்பு உடையில்.. வெண்ணிற பூவென பூத்துக்குலுங்கும் நிக்கி கல்ராணி - ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ! 

அதற்கு பதில் அளித்த ஷகீலா, நான் அதை வரவேற்கவில்லை, ஆனால் ஆடை என்பது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று கூறினார். மீண்டும் பேச தொடங்கிய நடிகை ஷகிலா நீங்களும் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர், அதன் பிறகு பத்திரிக்கையாளராக பயணித்தவர், பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறீர்கள், ஏன் நீங்கள் கற்பழிக்கும் காட்சிகளில் நடித்ததே இல்லையா? என்ற கேள்வியை முன் வைத்தார். 

உடனே அதற்கு பதில் அளிக்க தடுமாறிய பயில்வான் என் படங்களை பற்றி நான் விமர்சிக்க விரும்புவதில்லை என்று மலுப்பலாக பதில் கூறினார். உடனே சகிலாவை தாக்கும் வகையில் ஏற்கனவே சகிலா எப்படி இருந்தார்? இப்பொழுது பஞ்சாயத்து செய்ய இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என்று சர்ச்சையான கேள்வியை முன் வைக்க, 

நான் என் வாழ்க்கையில் நடந்த எந்த ஒரு விஷயங்களையும் மறைத்ததே இல்லை. அதேபோல நான் யார் வாழ்க்கையில் சென்று பஞ்சாயத்தும் செய்ததில்லை. நான் ஆபாச திரைப்படங்களில் நடித்ததை எப்பொழுதுமே மறைத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த துறையில் நான் தான் குயின் என்று பெருமையோடு கூறுவேன் என்று பயில்வான் ரங்கநாதனின் வாயடைக்கும் அளவிற்கு ஒரு பதிலை கூறினார் ஷகீலா. 

மேலும் நீங்கள் ஒரு கிளாமரான காட்சியில் ஒரு நடிகையுடன் நடிக்கும் பொழுது அது எந்த விதமான பிரச்சினையும் ஏற்படுத்தாது, அதே ஒரு நடிகை கிளாமராக நடித்தால் அவருடைய நடத்தை பற்றி நீங்கள் சரமாரியான கேள்வியை எழுப்புவீர்கள், இதுதான் உங்கள் தர்மமா என்று பயில்வனை கடுமையாக சாடினார் சகிலா.

பெண் நடிகைகள் கவர்ச்சியாக உடை அணிந்து ஆடியோ லான்ச் ட்ரைலர் லான்ச் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பிய பயில்வானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் "நாங்கள் அப்படித்தான் ஆடை அணிந்து வருவோம், எங்கள் கால் மீது தான் கால் போட்டு நாங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறோம், எங்கே கேமரா வைப்பார்கள் என்று எங்களுக்கு தெரியாதா? தெரிந்தே தான் நாங்கள் காட்டுகிறோம் என்று கூறினார். 

இதனிடையே பேசிய நடுவர் குயிலி, ஷகிலாவும் சினிமாவை சேர்ந்தவர், நானும் சினிமாவை சேர்ந்தவள், நீங்களும் எங்களுக்கு முன்பே சினிமாவில் இருக்கும் மூத்த சினிமா நடிகர் தான், சினிமாவைப் பற்றி வெளியில் இருந்து பேசுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் இந்த சினிமா என்னும் குடும்பத்திற்குள் இருந்து கொண்டே நீங்கள் இப்படி பேசுவது நியாயமா என்ற கேள்வி எழுப்ப, சட்டென்று எனக்கு எந்தவித தவறும் தெரியவில்லை என்று கூறினார். 

பயில்வான் அண்ணனுக்கு வயதாகி விட்டது, இனி யாருக்காக ஸ்டண்ட் டுப்பாக நடிக்க முடியாது. ஆகையால் இப்படி நடிகைகளை பற்றி தவறாக பேசிய வீடியோ வெளியிட்ட மட்டுமே இனி அவரால் சம்பாரிக்க முடியும் என்று கடுமையாக சாடினார் ஷகீலா.

Janhvi Kapoor: ஹைடெக் கவர்ச்சி.. உடல் ட்ரான்ஸ்பரென்ட்டாக தெரியும் உடை.. குயின் கிளியோபாட்ராவாக மாறிய ஜான்வி!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி