
உலகெங்கிலும் இருந்து வந்த பிரபலங்கள் பலரும் இந்த மெட் காலா 2024 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இந்திய தொழிலதிபரும், கோடீஸ்வரருமான சுதா ரெட்டி, ஐவரி பட்டு கவுனுடன் நிகழ்விற்கு வந்தார். சுதா தனது 180 காரட் வைர நெக்லஸால் ஃபேஷன் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். அவர் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஒரு பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சுதா இந்த நிகழ்விற்காக 'Amore Eterno' 180-காரட் வைர நெக்லஸை அணிந்திருந்தார், அதில் 25-காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20-காரட் இதய வடிவ வைரங்களும் இருந்தது. அவை சுதா, அவரது கணவர் மற்றும் 2 குழந்தைகளை குறிக்கின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
15 லட்சம் சம்பளம் வேண்டாம்... வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் வெற்றி பெற்ற இளைஞர்!
மேலும் சுதா ரெட்டி 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும் 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார், அதன் மதிப்பு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 165 கோடி) என்று கூறப்படுகிறது. அங்கு வந்தவர்கள் கண்களை கொள்ளைகொள்ளும் வண்ணம் இருந்தது அவரது உடையும் நகையும்.
யார் இந்த சுதா ரெட்டி
ஹைதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான மேகா கிருஷ்ணா ரெட்டியின் மனைவி தான் சுதா ரெட்டி. அவர் மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) இன் இயக்குநராகவும் உள்ளார். சுதா தனது இன்ஸ்டாகிராம் பயோவில் தன்னை கலை மற்றும் ஃபேஷனின் தீவிர ஆர்வலராக விவரித்துள்ளார். மற்றும் அவரது தொண்டு மனப்பான்மைக்காக பரவலாக அறியப்படுகிறார் சுதா ரெட்டி.
மெட் காலா 2021ல் அவர் முதல் முறை தோன்றிய பிறகு, பிரபல டிசைனர் இரட்டையர்களான ஃபால்குனி மற்றும் ஷேன் பீகாக் ஆகியோரின் ஹாட் கோச்சர் கவுனில், மெட் காலாவில் சுதா கலந்துகொள்வது இது இரண்டாவது முறையாகும்.
மேலும் சுதா அணிந்திருந்த ஆடை சுமார் 4,500 மணி நேரத்திற்கும் மேலாக 80க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் கைவினைப்பொருளாக வடிவமைக்கப்பட்டது. ஆடையின் ஒவ்வொரு பகுதியும் உன்னிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த சுதா ரெட்டி தனது 19வது வயதில் கிருஷ்ணா ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இன்று அவர் "ஹைதராபாத் ராணி தேனீ" என்று அழைக்கப்படுகிறார்.
வட்டியோடு பணம் வேண்டும்.. மாணவியை கொடூரமாக தாக்கி.. முடியை எரித்த கொடூர மாணவர்கள்.. போலீஸ் அதிரடி