மெக்கர்க், அபிஷேக் போரெல் அடிச்ச அடில ஆடிப்போன ராஜஸ்தான் - டெல்லி கேபிடல்ஸ் 221 ரன்கள் குவிப்பு!

First Published May 7, 2024, 9:18 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 56ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 56ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் அபிஷேக் போரெல் மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே பிரேசர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

முதல் ஒவரில் 6, 2ஆவது ஓவரில் 10, 3ஆவது ஓவரில் 15 என்று ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4ஆவது ஓவரை எதிர்கொண்ட ஜாக் பிரேசர் மெக்கர்க், ஆவேஷ் கானின் முதல் ஓவரிலேயே 4, 4, 4, 6, 4, 6 என்று 28 ரன்கள் எடுத்து 19 பந்துகளில் அரைசதமும் அடித்தார். இதன் மூலமாக இந்த சீசனில் 4ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

கடைசியில் 20 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் போரெல் 28 பந்துகளில் தனது முதல் அரைசதம் அடித்தார். மேலும், டெல்லி கேபிடல்ஸ் ஆலோசகரான கங்குலிக்கு தனக்குரிய பாணியில் நன்றி தெரிவித்தார். அவர், 36 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 1 ரன்னிலும், அக்‌ஷர் படேல் 15, ரிஷப் பண்ட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Delhi Capitals vs Rajasthan Royals, 56th IPL 2024 Match

டெல்லி கேபிடல்ஸ் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த குல்பதீன் நைப் 19 ரன்களில் வெளியேறினார். கடைசியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 5 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

click me!