Summer Skin Care : கோடையில் தினமும் பாடி லோஷன் பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லதா..?

First Published Apr 18, 2024, 5:15 PM IST


கோடையில் சருமத்திற்கு பாடி லோஷனை பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா? என்ற குழப்பம் பலருக்கு ஏற்படும். அதற்கான பதில் இதோ..
 

பாடி லோஷனைப் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் வெடிப்பதை தவிர்க்க அனைவரும் பாடி லோஷனை பயன்படுத்துவார்கள். ஆனால் கோடைக்காலத்தில் பாடி லோஷனைத் பயன்படுத்தலாமா..? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

கோடையில் சருமம் பராமரிப்பு: கோடையில், பெரும்பாலான மக்கள் தங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும் பலர் பல வகையான கிரீம்கள், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தி, தங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், சிலர் தினமும் காலையிலும் மாலையிலும் என இருவேளையும் பாடி லோஷனைப் பயன்படுத்துகின்றனர்.

பாடி லோஷன் ஏன் அவசியம்?:
பாடி லோஷனை சருமத்தில் பயன்படுத்தலாம்; அது நல்லது. மேலும்  சில பாடி லோஷன்களில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் குளிர்ச்சியான பொருட்கள் உள்ளன. கூடுதலாக, லோஷன் தோல் வறட்சி மற்றும் அரிப்பு குறைக்கிறது.

இதையும் படிங்க:  Kajal Side Effects : தினமும் 'காஜல்' யூஸ் பண்றீங்களா..? இந்த பிரச்சனைகள் வரும்.. ஜாக்கிரதை!

தினமும் பாடி லோஷன் பயன்படுத்துவது நல்லதா?
கோடையில் தினமும் பாடி லோஷனை பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா இல்லையா..? அப்படி பயன்படுத்தினால் என்ன நடக்கும்.. என்று பலருக்கு கேள்வி எழும். ஆனால், பாடி லோஷனை தினமும் பயன்படுத்த கூடாது. மீறினால் பக்க விளைவுகள் ஏற்படும். அவை..

இதையும் படிங்க: Beauty Tips : இனி முகத்திற்கு சோப்புக்குப் பதிலாக இவற்றைப் பயன்படுத்துங்கள்..உங்கள் முகம் பளபளக்கும்!

கோடையில் பாடி லோஷனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
கோடையில் பாடி லோஷனைப் பயன்படுத்தினால் சில பாதிப்புகள் ஏற்படும். அவை..

உங்கள் தோல் ஒட்டும் தன்மையை உணரலாம். சிலருக்கு லோஷனில் உள்ள பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

லோஷனை முகத்தில் தடவினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஒருவேளை கோடையில் பாடி லோஷனைப் பயன்படுத்தினால், குறைந்த அளவு பயன்படுத்துவது தான் நல்லது. நீங்கள் லோஷன் தடவியவுடன் சிவப்பு சொறி, பருக்கள் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!