Kajal Side Effects : தினமும் 'காஜல்' யூஸ் பண்றீங்களா..? இந்த பிரச்சனைகள் வரும்.. ஜாக்கிரதை!
காஜலை தினமும் கண்களில் தடவினால் பாதிப்பு ஏற்படுமா? காஜலின் பக்கவிளைவுகளை சமாளிக்க சில குறிப்புகள் இங்கே...
ஒவ்வொரு பெண்ணும் மேக்கப் போடுவதை ரொம்பபே விரும்புவார்கள். அந்தவகையில், காஜலும் மேக்கப்பில் ஒரு அங்கம். இது கண் அழகை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தினமும் காஜலைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தினமும் காஜலைப் பயன்படுத்துவது கண்களுக்குக் கீழே உள்ள தோலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே காஜல் கண்களை மற்றும் அதை சுற்றியுள்ள தோலை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
காஜல் பாதிப்பு: காஜலை பயன்படுத்துவது கெட்ட பழக்கம் இல்லை. இது கண்களின் தோற்றத்தை அதிகரிக்கும். ஆனால் இதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கண்களில் அலர்ஜி மற்றும் வறட்சி ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி கண்களுக்குள் வீக்கம் கூட ஏற்படும்.
அதுமட்டுமின்றி, அதை பயன்படுத்திய பிறகு அவற்றை அகற்றாமல் இருப்பது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. நீங்கள் செய்யும் இந்த தவறு கண்களைச் சுற்றியுள்ள தோலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. காரணம் முகத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. காஜலைப் பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு நாளும் இந்த தவறை நீங்கள் செய்தால், அனைத்து தோல் பராமரிப்பு நடைமுறைகளிலும் கூட எந்த வித்தியாசமும் இருக்காது.
இதையும் படிங்க: உங்கள் கண்கள் வீங்கி இருந்தால் இந்த டிப்ஸ கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க..!!
பால்: கண்களைச் சுற்றியுள்ள காஜலை க்ளென்சிங் மில்க் உதவியுடன் அகற்றலாம். முதலில் ஒரு காட்டன் பஞ்சில் பால் நனைத்து, லேசாக உங்கள் கைகளால் காஜல் போட்ட பகுதியை மெதுவாக துடைக்கவும்.
இதையும் படிங்க: உங்களுடைய கண் வலியைக் குறைக்க பயனுள்ள குறிப்புகள்..!!
வேஸ்லின்: இவற்றின் உதவியுடன் உங்கள் முகத்தில் உள்ள காஜலை அகற்றலாம். இதற்கு உங்கள் விரல் நுனியில் வேஸ்லின் எடுத்து காஜல் போட்ட இடத்தில் மெதுவாக தேய்க்கவும். பிறகு டிஷ்யூ மூலம் துடைக்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D