ராமநாதபுரத்தில் திடீரென கரை ஒதுங்கிய 3 திமிங்கலங்கள் அதிகாரிகளின் துரித முயற்சியால் மீண்டும் ஆழ் கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது நரிப்பையூர் மீனவ கிராமம். இது மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடைக்கோடியில் இருக்கின்ற கடலோர பகுதியாக அறியப் படுகிறது. இந்த நரிப்பையூர் கடற்கரை பகுதிகளில் சில நேரங்களில் அரியவகை உயிரினங்கள் கரை ஒதுங்கி அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நரிப்பையூர் கடற்கரை பகுதியில், திடீரென திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
undefined
இதனையடுத்து, மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி வன உயிரின சரகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அந்த திமிங்கலத்தை கண்டு அறிந்தனர். இதனையடுத்து, அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலில் விட்டாலும் அந்த திமிங்கலம் கடலுக்குள் செல்லாமல், கரை பகுதிக்கே வந்துவிட்டது. கரையிலேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது அதே கடற்கரை பகுதியில், மேலும் 2 திமிங்கலங்கள் சுற்றி சுற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கஞ்சா வைத்திருந்த விவகாரம்; சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு
இதனையடுத்து, வேட்டை தடுப்பு காவலர் செல்வம் என்பவர் கடலுக்குள் நீந்தியபடியே, திமிங்கலத்தை வழிகாட்டி அழைத்து சென்றார். அந்த திமிங்கலத்ரா பின்தொடர்ந்தவாறே மற்ற 2 திமிங்கலங்களுடன் மூன்று திமிங்களங்களும் ஆழ்கடலை நோக்கி சென்றன. எனினும், திமிங்கலங்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு வருகின்றனவா என, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.