ராமநாதபுரம் அருகே வட மாநில நிறைமாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் அருகே உள்ள களத்தாவூா் கண்மாய்க்குள் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2ம் தேதி கைப்பற்றி உடற் கூறாய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடற்கூராய்வில் அந்தப் பெண்ணின் வயிற்றில் 9 மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.
சிலம்பத்தில் பதக்கங்களை அள்ளி குவித்த மாணவன் கிணற்றில் மூழ்கி பலி - மதுரையில் பரபரப்பு
undefined
இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றாவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், தனிப்படை அமைக்கப்பட்டு 2 வாரங்கள் கடந்த நிலையில், விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. சாலையில் தலைக்கவசம் அணியவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி காவல் துறையினர் வசூல் வேட்டை நடத்துவதிலேயே குறியாக இருக்கின்றனரே தவிற இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும் கொலை தொடர்பாக காவல் துறை தரப்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.