சூதாடி முதல் டாக்டர்ஸ் வரை.. செல்வராகவன், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து டிராப் ஆன படங்களின் லிஸ்ட் இதோ

First Published Feb 7, 2024, 11:44 AM IST

செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு டிராப் ஆன படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Dropped Movies of Dhanush

தமிழ் திரையுலகில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அதேபோல் அவரின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இதுதவிர அருண் மாதேஸ்வரன், மாரி செல்வராஜ், எச்.வினோத் ஆகியோர் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா 2 ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இதுதவிர நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், இதுவரை நடித்து டிராப் ஆன தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாக்டர்ஸ் (Doctors)

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த திரைப்படம் தான் டாக்டர்ஸ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இதுதவிர யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு இப்படத்தின் போஸ்டரையும் வெளியிட்டனர். ஆனால் இப்படம் அப்படியே கைவிடப்பட்டது.

சூதாடி (sudhaadi)

கோலிவுட்டின் பிளாக்பஸ்டர் காம்போவாக கொண்டாடப்படும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் தான் சூதாடி. இதில் தனுஷ் உடன் பார்த்திபன், லட்சுமி மேனன், மீனாட்சி ஆகியோர் நடிக்க இருந்தனர். வெறும் 5 நாள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் இப்படம் கைவிடப்பட்டது.

இது மாலை நேரத்து மயக்கம் (Idhu Maalai nerathu mayakkam)

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி டிராப் ஆன மற்றுமொரு படம் தான் இது மாலை நேரத்து மயக்கம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டு படமும் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... விஜய், அஜித், ரஜினியெல்லாம் லிஸ்ட்லயே இல்ல.. சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய தமிழ் ஹீரோஸின் லிஸ்ட் இதோ

தேசிய நெடுஞ்சாலை (Thesiya Nedunchaalai)

தனுஷும் வெற்றிமாறனும் முதன்முதலில் இணைந்து பணியாற்ற இருந்த படம் தான் தேசிய நெடுஞ்சாலை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் அப்படம் அறிவிப்போடு டிராப் ஆனது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை படத்தின் கதையை சித்தார்த்தை வைத்து உதயம் என்.ஹெ.4 என்கிற பெயரில் எடுத்தார் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ஒருவர்.

காசிமேடு (kasimedu)

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியால் அறிவிக்கப்பட்டு டிராப் ஆன மற்றுமொரு திரைப்படம் தான் காசிமேடு. இப்படத்தில் அஜித், பரத் ஆகியோரும் நடிக்க இருந்தனர். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. இப்படத்தை கஜினி பட தயாரிப்பாளர் சந்திரசேகர் தயாரிக்க இருந்தார்.

திருடன் போலீஸ் (Thirudan Police)

தனுஷ் நடிப்பில் டிராப் ஆன மற்றுமொரு திரைப்படம் தான் திருடன் போலீஸ். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்க இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு பேப்பரில் இப்படத்தின் போஸ்டரையும் ரிலீஸ் செய்தனர். ஆனால் இப்படம் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... காதலுக்கு வயசு முக்கியம் இல்லையாம் பாஸ்... தன்னைவிட வயதில் மூத்த பெண்களை கரம்பிடித்து செட்டில் ஆன டாப் ஹீரோஸ்

click me!