ஆபத்து...ஆபத்து!! 30 வயதிற்குப் பிறகு பெண்களைத் தாக்கும் கால்சியம் சத்துக் குறைபாடு.. அறிகுறிகள் இதோ!

First Published May 8, 2024, 5:48 PM IST

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும். கால்சியம் குறைபாட்டால் உடலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் அவசியம் என்பதை நம் அனைவரும் அறிந்ததே. உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். இந்நிலையில், பெண்கள் பெரும்பாலும் 30 வயதில் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் குறைபாட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

தசைப்பிடிப்பு: கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, தசை செயல்பாட்டிற்கும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், நீங்கள் மீண்டும் மீண்டும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்படுவீர்கள். குறிப்பாக, உங்கள் கால்களில் பிடிப்புகள் அதிகம் ஏற்படும். உங்களுக்கும் இது போன்ற பிடிப்பு ஏற்பட்டால் உங்கள் கால்சியம் அளவை சரிபார்க்கவும்.

உணர்வின்மை: உங்கள் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருந்தால், கைகள், கால்கள் அல்லது முகத்தில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படும். எனவே,  நரம்பு செயல்பாட்டிற்கு கால்சியம் மிகவும் அவசியம்.

பலவீனமான நகங்கள்: உடலில் கால்சியம் குறைபாடு நகங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா..? உங்கள் நகங்கள் திடீரென்று உடையந்தாலோ அல்லது பலவீனமான இருப்பதை நீங்கள் கண்டால், அதற்கு கால்சியம் குறைபாடு தான் காரணம்.

இதையும் படிங்க: முப்பது வயதை கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

பற்கள் பலவீனமடைதல்: கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இவற்றின் குறைபாடு பற்களின் பலவீனம்  அல்லது உடையக்கூடிய தன்மையை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: Calcium Rich Foods : உங்களுக்கு பால் பிடிக்கவில்லையா.? பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!!

பலவீனம்: உடலில் குறைந்த கால்சியம் அளவு உடல் பலவீனத்திற்கு பங்களிக்குமாம். நீங்கள் குறைவாக வேலை செய்தாலும், போதுமான ஓய்வு எடுத்துக் கொண்டாலும் கூட  நீங்கள் பலவீனமாக உணர்ந்தால், அதற்கு காரணம் குறைந்த கால்சியம் அளவு ஆகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!