சினிமாவை மிஞ்சிய கொலை முயற்சி சம்பவம்; ஆந்திராவில் தெலுங்குதேசம் வேட்பாளரின் பாதுகாவலரை கொல்ல முயற்சி

Published : May 15, 2024, 06:06 PM IST
சினிமாவை மிஞ்சிய கொலை முயற்சி சம்பவம்; ஆந்திராவில் தெலுங்குதேசம் வேட்பாளரின் பாதுகாவலரை கொல்ல முயற்சி

சுருக்கம்

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆலகட்டாவில் தெலுங்கு தேசம் வேட்பாளர் அகிலப்ரியாவின் பாதுகாவலர்  மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆலகட்டாவில் தெலுங்கு தேசம் வேட்பாளர் பூமா அகிலபிரியாவின் பாதுகாவலர் நிகில். நேற்று இரவு அகிலபிரியா  வீட்டின் முன்பு நிகில் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். அப்போது​ அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சற்று தூரம் சென்றது. கார் மோதிய வேத்தில் தூக்கி வீசப்பட்ட நிகிலை காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய குண்டர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

குண்டர்களின் கொலைவெறி தாக்குதலில்  நிகில் படுகாயம் அடைந்த நிலையில் உடன் இருந்த மற்ற பாதுகாவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இது பற்றி வேட்பாளர் அகில பிரியா, பாதுகாவலர் நிகில் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் நிகிலை சிகிச்சைக்காக ஆலகட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து திடீரென கழன்று ஓடிய சக்கரம்; இலவச பேருந்துக்காக காத்திருந்து ஏறிய பெண்கள் சோகம்

வேட்பாளர் அகிலபிரியா வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் கொலை முயற்சி தொடர்பான காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். துரத்திச் சென்று பிடிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!