வேனில் வைத்து பெண் காவலர்கள் தாக்கினார்கள்: சவுக்கு சங்கர் புகார் - விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published May 15, 2024, 3:13 PM IST

பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் அளித்த நிலையில் அதுகுறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்குசங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். அதனைதொடர்ந்து சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த 10ஆம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசிய பெண் காவலர்களை கொண்டே அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். இதற்கு முன்பு பெலிக்ஸ் ஜெரால்ட்டும் பெண் காவலர்கள் பாதுகாப்பிலேயே நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்பது நினைகூரத்தக்கது.

Latest Videos

undefined

கைய வச்சு பாருங்க அப்போ தெரியும்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை!

இந்த நிலையில், கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் புகார் கூறினார். காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக நீதிபதி ஜெயப்பிரதாவிடம் அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, சவுக்கு சங்கரை பரிசோதிக்க திருச்சி நீதிபதி உத்தரவிட்டார். சவுக்கு சங்கருக்கு காயம் உள்ளதா என்பதை திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

click me!