ஸ்ரீதேவி டூ ரகுல் ப்ரீத் சிங்!! பீக்கில் இருக்கும் போதே.. கோடீஸ்வரர்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்!

First Published Feb 27, 2024, 12:43 PM IST

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, கோடீஸ்வரர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

80-பது மற்றும் 90-களில், 30 வயதை எட்டிய நடிகைகளுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்பட்டது. எனவே 30 வயதை தொட்டு விட்டால், கப் சிப் என நடிகைகள் திருமணம் செய்து கொண்டு, திரை உலகை விட்டு விலகி விடுவார்கள். அப்படியே தொடர்ந்து நடித்தாலும் அவர்களுக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்க வாய்ப்பே இல்லை! 
 

ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது. திருமணத்திற்கு பின்பும் பல நடிகைகள் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். சரி லேட்டாக திருமணம் செய்து கொண்டாலும், கோடீஸ்வரர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

தேவைதைய நேரில் பார்த்திருங்கீங்களா? பாருங்க.. நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் க்யூட் போட்டோஸ்..
 

நடிகை ஸ்ரீதேவி (Sridevi) : 80ஸ் கிட்ஸின் கனவு கன்னியான நடிகை ஸ்ரீதேவி, தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், பின்னர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக ஹிந்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர். பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல கோடீஸ்வரரும், தயாரிப்பாளருமான போனி கபூர்... ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர் என்பது தெரிந்தும், அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.  கர்ப்பமான பின் அவசர அவசரமாக போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர், குழந்தைகள் பிறந்த பின்னர் முழுமையாக திரை உலகில் இருந்து விலகினார். தன்னுடைய மகள்கள் நன்கு வளர்ந்ததும், மீண்டும் திரையுலகில் கம் பேக் கொடுத்தார் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.
 

அசின் (Asin): மலையாள நடிகையான அசின், தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.  அஜித், விஜய், சூர்யா, கமல், விக்ரம், என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட இவர், தமிழில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். கஜினி ஹிந்தி ரீமேக் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான இவர், பிரபல நடிகர் சல்மான் கானின் நண்பரும், மைக்ரோமேக்ஸ் ஓனருமான ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, முழுமையாக திரை உலகை விட்டு விலகினார்.

“எங்க அம்மா இல்ல.. அருண் விஜய் அம்மா தான் இதுக்கு காரணம்..” மனம் திறந்த வனிதா விஜயகுமார்..
 

kutty radhika

குட்டி ராதிகா (Kutty  Radhika):  இயக்குனர் ஜனாதனன் இயக்கத்தில், நடிகர் ஷியாம், அருண் விஜய், நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற இயற்கை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் குட்டி ராதிகா. தமிழைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர், முன்னணி நடிகையாக இருக்கும் போது... கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்த இவர், தற்போது கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்

ஹன்சிகா (Hansika): பாலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக, மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்  ஹன்சிகா. தன்னுடைய முதல் படத்திலேயே கொழுக்கு மொழுக்கு அழகால் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஹன்சிகா, தன்னுடைய முதல் பட வெற்றியைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக எங்கேயும் எப்போதும், விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சிம்புக்கு ஜோடியாக வாலு என பல படங்களில் நடித்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, பிரபல தொழிலதிபரும் தன்னுடைய நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சில்வர்ஜரி பட்டு சேலையில்.. வெள்ளி சிலை போல் நின்று விதவிதமாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! வியக்க வைத்த போட்டோஸ்

ரீமா சென்: (Remasen): தமிழில் இயக்குனர் கௌதமேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரீமாசென், பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான ஷிவ் கரன்சிங் என்பவரை 2012 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்தது விலகிய ரீமா சென்னுக்கு தற்போது அழகிய மகன்  ஒருவரும் உள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்  (Rakul  Preeth Singh):  சமீபத்தில் திருமண உறவில் இணைந்த நடிகைகளின் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது பாலிவுட் திரை  உலகிலும் கவனம் செலுத்தி வரும் இவர், பிரபல தொழிலதிபரும் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான, ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார். இவரும் இந்தி திரையுலகில் மிகவும் கோடீஸ்வர பிரபலங்கள் ஒருவர் ஆவார்.

அக்கா பவதாரிணியுடன் பார்ட்டி செய்த மறக்க முடியாத நினைவுகள்..! யுவன் பகிர்ந்த பழைய புகைப்படம்!
 

click me!