கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா? சாய் பல்லவி தங்கச்சி வெளியிட்ட போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

First Published Feb 12, 2024, 8:30 AM IST

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு சமீபத்தில் நிச்சயம் முடிந்த நிலையில், அவர் வெளியிட்ட வெக்கேஷன் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

sai pallavi sister

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் சாய் பல்லவி. அவர் நடிப்பில் தற்போது தமிழில் எஸ்.கே.21 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதவிர தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தண்டல் என்கிற படத்தில் நடிக்கிறார்.

sai pallavi sister Pooja kannan

இப்படி பிசியான ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவிக்கு தற்போது 31 வயது ஆகிறது. இருப்பினும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், அவருக்கு முன்னதாகவே அவரது தங்கை திருமணத்துக்கு தயாராகிவிட்டார். சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்கிற தங்கை உள்ளார். இவரும் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தான் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... ரவுடி பேபினா சும்மாவா... தங்கச்சி திருமண விழாவில் குடும்பத்தினருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி

sai pallavi sister vacation photos

நடிகை பூஜா கண்ணன் தனது நீண்ட நாள் காதலனான வினீத் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மணமக்களுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடனமாடிய வீடியோவும் வைரல் ஆனது. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Pooja Kannan vacation photos

பூஜா கண்ணன் தற்போது ஜப்பானில் உள்ள ஹொகய்டோ என்கிற பனிப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டதை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா என கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர். 

sai pallavi sister photos viral

பூஜா கண்ணன் தனது தாயாருடன் எடுத்த போட்டோவை பதிவிட்டிருந்தாலும், வினீத்தும் உடன் சென்றிருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ அவரது புகைப்படங்களை பார்த்ததும் ஹாப்பி ஹனிமூன் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார் பூஜா.

இதையும் படியுங்கள்... 2வது திருமணம் செய்யும் நாக சைதன்யா .. மணமகள் வேற யாருமில்ல நாகார்ஜுனா உறவினர் பெண் தான்..

click me!