மாற்றுக் கொள்கை கொண்டவராக இருந்தாலும் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர்.! பாஜகவின் மாஜி MLA மறைவு- ஸ்டாலின் வேதனை

Published : May 09, 2024, 12:23 PM ISTUpdated : May 09, 2024, 02:32 PM IST
மாற்றுக் கொள்கை கொண்டவராக இருந்தாலும் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர்.! பாஜகவின் மாஜி MLA மறைவு- ஸ்டாலின் வேதனை

சுருக்கம்

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

தமிழக பாஜகவின் முதல் எம்எல்ஏ

தமிழகத்தில் இருந்து பாஜக சார்பாக முதல் சட்டமன்ற உறுப்பினர் சி.வேலாயுதம் ஆவார். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் அப்பகுதி மக்களின் நல திட்டங்களுக்காக பல்வேறு வகையில் உழைத்துள்ளார்.  வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த  நேன்று காலை காலமானார்.

இதனையடுத்து பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் அறிக்கையில், வேலாயுதம்  போன்றவர்கள்தான் தமிழ்நாட்டில் நமது கட்சியைக் கட்டமைத்து, மக்களிடம் நமது வளர்ச்சித் திட்டங்களை விளக்கியவர்களாவர். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் மீது அவர் கொண்ட அக்கறைக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் என தெரிவித்திருந்தார். 

என் மீதும், கலைஞர் மீதும் பாசம்

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேலாயுதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக வேறுபாடுகளின்றி இருந்தாலும், கட்சி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர் அவர்.

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

BJP : தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்.! இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!