தங்கையின் திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை சாய் பல்லவி குடும்பத்தினருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேமம் என்கிற ஒரே திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் சாய் பல்லவி. அப்படத்துக்கு பின்னர் கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.21 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்கிற சகோதரியும் உள்ளார். இவரும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அக்கா அளவுக்கு பூஜாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் நடிப்புக்கு முழுக்கு போட்ட பூஜா, தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டார். இவர் தன்னுடைய காதலனை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இவரது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து கியூட்டாக படுகா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி - வைரல் வீடியோ

இந்த நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். கல்யாணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த சாய் பல்லவி திட்டமிட்டுள்ளார். தங்கையின் நிச்சயதார்த்த விழாவையும் செம்ம கிராண்டாக நடத்திய சாய் பல்லவி, தன் தங்கைக்காக பியூட்டீஷியனாக மாறி அவருக்கு சிகை அலங்காரமும் செய்திருந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலானது.

Scroll to load tweet…

சாய் பல்லவி சிறந்த நடிகை என்பதை தாண்டி அவர் நடனத்திலும் செம ஸ்பெஷலிஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது நடனத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் இன்றளவும் யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ளது. சாய் பல்லவி மட்டுமின்றி அவரது குடும்பமே டான்ஸில் கைதேர்ந்தவர்கள் என்பது பூஜாவின் நிச்சயதார்த்த விழா மூலம் தெரியவந்துள்ளது. அதில் குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து சாய் பல்லவி ஆடிய மரண மாஸ் குத்தாட்டம் காண்போரை மெர்சலாக்கியது. அந்த டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... இதயத்தில் அடக்க முடியாத அளவுக்கு அன்பு.! சாய் பல்லவியின் தங்கை பூஜா வெளியிட்ட நிச்சயதார்த்த போட்டோஸ்!