ஆள விடுங்கடா சாமி... கமல், கார்த்தி படங்களை கிடப்பில் போட்டு காமெடியனை வைத்து படம் இயக்க கிளம்பிய ஹெச்.வினோத்!

First Published Jan 19, 2024, 3:55 PM IST

கமல்ஹாசனின் KH 233 மற்றும் கார்த்தியில் தீரன் 2 படங்களை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஹெச்.வினோத், அடுத்ததாக காமெடி நடிகருடன் இணைய உள்ளாராம்.

H Vinoth

சதுரங்க வேட்டை தொடங்கி துணிவு வரை தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹெச்.வினோத். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. அஜித் நாயகனாக நடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் கமல்ஹாசன் படம்.

Kamalhaasan, Director Vinoth

கமல்ஹாசனின் 233-வது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இப்படம் அறிவிப்போடு நிற்கிறது. அதன்பின்னர் எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இடையே இப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என கூறப்படுகிறது. கமல் மற்ற படங்களில் பிசியாகி உள்ளதால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ளாராம்.

இதையும் படியுங்கள்... ஜப்பானின் தோல்வி.. கம் பேக் கொடுத்தே ஆகணும்.. வினோத்துடன் இணையும் கார்த்தி - தீரன் படத்தின் Sequel உருவாகிறதா?

Karthi, Director H vinoth

கமல் படம் தாமதம் ஆனதால், கார்த்தியை வைத்து தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவுக்கு வந்த ஹெச்.வினோத். அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தொடங்கிய நிலையில், அப்படத்தின் நாயகன் கார்த்தி வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத், தீரன் 2 படத்தையும் காத்திருப்பு பட்டியலில் போட்டுவிட்டு சைலண்டாக அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

Yogibabu

அதன்படி நகைச்சுவை நடிகர் யோகிபாபுவை வைத்து தான் தன்னுடைய அடுத்த படத்தை எடுக்க உள்ளாராம் ஹெச்.வினோத். இது அரசியல் நையாண்டி உடன் கூடிய காமெடி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. சிறு பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து முடிக்க ஹெச்.வினோத் திட்டமிட்டு உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை முடித்த பின்னரே தீரன் 2 அல்லது கமல் படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் கையிலெடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதையும் படியுங்கள்... குடும்பத்தோடு சென்று... சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேவரைட் காரை சொந்தமாக வாங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் - போட்டோஸ் இதோ

click me!