அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாக பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் அளித்த நிலையில், திருச்சி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோவை மத்திய சிறைக்கு சென்ற திருச்சி போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்ததற்கான ஆவணங்களை கொடுத்தனர்.
சவுக்கு சங்கர் மீது தொடரும் வழக்குகள்
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து ஒருமையில் விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர், அப்போது பெண் காவலர்கள் பதவி உயர்விற்காக தலைமை காவல் அதிகாரிகளோடு இணக்கமாக செல்வதாக கருத்து தெரிவித்தார்.இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேனியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தாக கூறியும் தேனி போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
இதனிடையே கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், கண்களை கட்டிவிட்டு 10 போலீசார் சுற்றி நின்று கொண்டு பிளாஸ்டிக் பைப்பால் அடித்ததாகவும்,. இதனால் சவுக்கு சங்கருக்உக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று மருத்துவர்கள் மற்றும் சட்டத்துறையினர் சவுக்கு சங்கரின் உடல் நிலையை பரிசோதித்துள்ளனர்.
அடுத்தடுத்து கைது செய்யப்படும் சவுக்கு சங்கர்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்கு பதியப்பட்டு வருகிறது. . சேலம், சென்னை, திருச்சி என பல ஊர்களில் பதியப்பட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார். திருச்சியை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்,
பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து திருச்சியில் கோவை சென்ற போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். இதற்கான ஆவணத்தில் போலீசார் சவுக்கு சங்கரிடம் கையொப்பம் வாங்கியுள்ளனர்.