MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காத்திருந்த எச்.வினோத்... கைவிட்ட கமல்ஹாசன்! மருதநாயகம் போல் டிராப் ஆன KH233 - காரணம் என்ன?

காத்திருந்த எச்.வினோத்... கைவிட்ட கமல்ஹாசன்! மருதநாயகம் போல் டிராப் ஆன KH233 - காரணம் என்ன?

எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த KH233 திரைப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

2 Min read
Ganesh A
Published : Jan 10 2024, 03:05 PM IST| Updated : Jan 10 2024, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Kamal, H Vinoth

Kamal, H Vinoth

விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் சதுரங்க வேட்டை என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கட்டிப்போட்ட எச்.வினோத்துக்கு சதுரங்க வேட்டை வசூல் வேட்டை செய்து அசத்தியது. இதையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்கிற படத்தை இயக்கினார் எச்.வினோத். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

26
Director H Vinoth

Director H Vinoth

தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவத்தை விறுவிறுப்பு குறையாத திரைக்கதையுடன் மக்களுக்கு திரையில் காட்டி வெற்றி வாகை சூடினார் எச்.வினோத். இப்படத்தின் வெற்றி எச்.வினோத்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தீரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித்துடன் இணையும் வாய்ப்பு எச்.வினோத்துக்கு கிடைத்தது. இதனால் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்கிற திரைப்படத்தை இயக்கினார். இது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.

36
Ajith, H Vinoth

Ajith, H Vinoth

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றியபோது எச்.வினோத்தின் திறமையை பார்த்து வியந்து போன அஜித், அடுத்தடுத்து தன்னுடைய 2 படங்களை இயக்கும் வாய்ப்பை எச்.வினோத்துக்கு கொடுத்தார். இதையடுத்து அஜித்தை வைத்து வலிமை மற்றும் துணிவு என இரண்டு ஆகஷன் திரைப்படங்களை எடுத்தார் எச்.வினோத். இதில் வலிமை சற்று சொதப்பினாலும், துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... விஜய் கூட செய்யாத உதவியை... விஜயகாந்த் மகனுக்காக செய்ய முன்வந்த ராகவா லாரன்ஸ் - குவியும் பாராட்டு

46
KH 233

KH 233

அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்களை இயக்கிய எச்.வினோத்துக்கு அடுத்ததாக கமலிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரின் அழைப்பை ஏற்று அவருக்காக ஒரு கதையை எச்.வினோத் தயார் செய்து அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு தற்காலிகமாக KH233 எனவும் பெயரிடப்பட்டு இருந்தது. இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்ச்சியையும் மேற்கொண்டார்.

56
kamal haasan

kamal haasan

KH233 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் அப்படம் குறித்த அடுத்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் இப்படம் என்ன ஆனது என கேள்வி எழத் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசனும் தற்போது மணிரத்னம் இயக்க உள்ள தக் லைஃப் படத்தில் நடிக்க தயாராகி வருவதால் எச்.வினோத் படம் கைவிடப்பட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

66
H Vinoth, Karthi

H Vinoth, Karthi

எச்.வினோத் கமலிடம் போலீஸ் கதை ஒன்றை சொன்னாராம். ஆனால் கமலுக்கு அது பிடிக்காததால், சில மாற்றங்களை செய்ய சொன்னாராம். அதில் எச்.வினோத்துக்கு உடன்பாடு இல்லாததால் அவர் கமல் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. கமல் படத்தில் இருந்து விலகியதை அடுத்து தற்போது கார்த்தியை வைத்து தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் எச்.வினோத் இறங்கி உள்ளாராம். 

இதையும் படியுங்கள்... கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள்.. 84 வயதிலும் இசை ராஜ்ஜியம் நடத்தும் கான கந்தர்வனின் இனிமையான இசை பயணம் - ஓர் பார்வை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved