ஸ்வீட்டி அனுஷ்கா முதல் டயானா நயன்தாரா வரை.. சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகளும்... அவர்களின் நிஜ பெயர்களும்

First Published Mar 13, 2024, 11:41 AM IST

சினிமாவில் நடிப்பதற்காக பெயரை மாற்றிக்கொண்ட நடிகைகள் யார்... யார்? அவர்கள் எதற்காக பெயரை மாற்றிக் கொண்டார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

Tamil Actress Who Changed their Name

சினிமா பிரபலங்கள் பெயர் மாற்றிக் கொண்டு நடிக்க வருவது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தும் நாயகிகளுக்கு ரா என்கிற எழுத்தில் தொடங்கும்படி பெயரை மாற்றிவிடுவார். நாளடைவில் நடிகைகளே தங்களுக்கு விருப்பமான பெயர்களை மாற்றிக்கொண்டு சினிமாவில் நுழைகின்றனர். ஒரு சிலரோ ஜோசியம் பார்த்து பெயரை மாற்றிக் கொள்கின்றனர். அப்படி பெயரை மாற்றிக்கொண்ட தமிழ் நடிகைகளின் ஒரிஜினல் பெயர் என்ன என்பதை பார்க்கலாம்.

நயன்தாரா (Nayanthara)

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது ஒரிஜினல் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவில் அறிமுகமானபோது மலையாள பட இயக்குனர் ஒருவர் தான் இவருக்கு நயன்தாரா என பெயரை மாற்றினார்.

அனுஷ்கா (Anushka Shetty)

நடிகை அனுஷ்கா ஷெட்டியை திரையுலகினர் பலரும் ஸ்வீட்டி என்றே அழைப்பார்கள். அவர்கள் செல்லமாக அப்படி அழைக்கவில்லை, அவரின் ஒரிஜினல் பெயரே ஸ்வீட்டி ஷெட்டி தான். சினிமாவுக்காக தான் தன் பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக்கொண்டார்.

அஞ்சலி (Anjali)

கற்றது தமிழ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. இவரது ஒரிஜினல் பெயர் பாலதிரிபுரசுந்தரி. சினிமாவில் நடிக்க பேன்ஸியான பெயர் வேண்டும் என்கிற காரணத்தால் தன் பெயரை அஞ்சலி என மாற்றிக் கொண்டார்.

ரம்பா (Rambha)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா, இவரது ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமி. இவரும் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ரம்பா என மாற்றிக் கொண்டார். தற்போது அதுவே அவருக்கு அடையாளமாக மாறிவிட்டது.

இதையும் படியுங்கள்... அடுத்த தளபதி இவர்தான் போலையே... விஜய் பாணியில் ரசிகர் படையை திரட்டி மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் - வீடியோ இதோ

சினேகா (Sneha)

கோலிவுட்டில் புன்னகை அரசி என கொண்டாடப்பட்ட நடிகை என்றால் அது சினேகா தான். இவரும் ரீல் பெயருடன் தான் படங்களில் நடித்து வந்தார். இவருடைய ஒரிஜினல் பெயர் சுஹாசினி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசன் (Shruti Haasan)

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனும் சினிமாவுக்காக தன்னுடைய பெயரில் ஒரு மாற்றம் செய்துள்ளார். இவருடைய ஒரிஜினல் பெயர் ஸ்ருதி ராஜலட்சுமி ஹாசன். அதை சுருக்கி ஸ்ருதிஹாசன் என மாற்றிக்கொண்டார்.

சாய் பல்லவி (Sai Pallavi)

பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி இன்று தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியும் தன்னுடைய பெயரில் ஒரு மாற்றம் செய்துள்ளார். இவரின் ஒரிஜினல் பெயர் சாய் பல்லவி செந்தாமரை. அது பெரிதாக இருப்பதாலும் ரசிகர்களால் மனதில் வைத்துக் கொள்ள முடியாது என்பதாலும் சாய் பல்லவி என வைத்துக் கொண்டுள்ளார்.

பாவனா (Bhavana)

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை பாவனாவின் ஒரிஜினல் பெயர் கார்த்திகா மேனன். இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை பாவனா என மாற்றிக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் ரஜினி படத்தையே பதம் பார்த்த மணிகண்டனின் ‘லவ்வர்’... ஓடிடிக்கு வருகிறது - எப்போ ரிலீஸ் தெரியுமா?

click me!