Savukku Shankar: என்னது சவுக்கு சங்கரை அடிச்சு கை எலும்பு முறிஞ்சு போச்சா? மாஜிஸ்திரேட் அதிரடி போட்ட உத்தரவு!

By vinoth kumarFirst Published May 7, 2024, 12:38 PM IST
Highlights

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர். 

சவுக்கு சங்கரை சிறையில் தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் குறித்து விசாரிக்க சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.  இதுகுறித்து சவுக்கு சங்கரின் பேட்டி குறித்து கோவை சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: இன்ஸ்டா நண்பனை நம்பி சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்! வீடியோவை வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பிய இளைஞர்கள்!

இதனையடுத்து தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கடந்த 5ம் தேதி கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் 17ம் தேதி வரை அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கரை அவரது வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் சந்தித்து பேசியிருந்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி 10க்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப் களை துணியால் கட்டி அடித்துள்ளதாக தெரிவித்தார். அதில் சவுக்கு சங்கருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Savukku : பிளாஸ்டிக் பைப்பால் அடித்திருக்காங்க; கை எலும்பு முறிந்திருச்சு; கதறும் சவுக்கு சங்கர் வழக்கறிஞர்!!

 சவுக்கு சங்கர் சிறையில் மெண்டல் பிளாக் என்று சொல்லக்கூடிய இடத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை தாங்கள் நாட இருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.  இந்நிலையில் சவுக்கு சங்கரை தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் குறித்து விசாரிக்க சட்டபணிகள் ஆணை குழுவுக்கு கோவை ஜே.எம்.4 மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். 

click me!