MK STALIN : திமுக அரசின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி.! மக்களுக்கான திட்டங்களில் சாதித்தது என்ன.?

By Ajmal Khan  |  First Published May 7, 2024, 12:29 PM IST

 கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு, மக்கள் மனதில் இடம் பிடித்ததா.? வல்லுநர்கள் திராவிட மாடல் ஆட்சியை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். 
 


திமுகவும் திராவிட மாடலும்

திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தநிலையில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் முன்னெடுக்கும் வளர்ச்சி மாதிரியைக் குறிக்க திராவிட மாடல் என்கிற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இப்போது இந்தச் சொல் இந்தியா முழுவதும் அரசியல் களத்திலும் அறிவுத் தளத்திலும் விவாத்திற்கு உள்ளாகும் சொல்லாக மாறிவிட்டது.

Tap to resize

Latest Videos

இதற்கு முன் அமைந்த திமுக அரசாங்கள் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்களின் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து, மக்கள் நலத் திட்டங்களையும் ஒடுக்கப்பட்டோரை வலுப்படுத்தும் சமூக மாற்றங்களையும் தொழில் வளர்ச்சியையும் பொதுநிதிப் பேணுதலையும் சீரான வகையில் ஒருங்கிணைத்தலை மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ என்று அழைக்கிறார். இதை வெகுசன அரசியல் சொல்லாடலாகவும் மாற்றியுள்ளார். 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மின்னணு ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்

திராவிட மாடல் திட்டங்கள் தமிழ்நாடு மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதோடு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும் உள்ளன என்று மு.க. ஸ்டாலின் உரிமை கோருகின்றார். இது 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசாங்கள் முன்னெடுத்து வரும் திட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டின் சமூக-பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்து வருகின்றது.

குறிப்பாக ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியே 7.24 சதவிகிதமாக இருக்கும்போது, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே 8.19 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது திமுக அரசாங்கம். இந்த வளர்ச்சியில் மிக முக்கியமான அம்சம், வளரும் தொழில்துறையான மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக  விளங்குகிறது.  2023-24ம் நிதியாண்டில் மட்டுமே நாட்டிலேயே கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது. 

பெண்களுக்கான திட்டங்கள்

இதற்கு இந்த அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வரும் தனித்துவமான திட்டங்கள் காரணம் என்று, தமிழ்நாடு அரசு திட்டக் குழுவின் கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை பள்ளிக் கல்வியிலும் உயர்க் கல்வியிலும் சேர்க்கை எண்ணிக்கையையும் தொடர் வருகையையும் அதிகரித்துள்ளது. 2021-22ல் புத்தாக்கத் தொழில் தொடங்குவதில், தமிழ்நாடு முதலிடத்திலும் வகிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிர்வாக அணுகுமுறை மாற்றங்கள். தேசிய தனிநபர் வருமானமே 1.72 லட்ச ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் மட்டுமே 2.75 லட்சம் ரூபாயாக உள்ளது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)  இரண்டாமிடத்தில் உள்ள தமிழ்நாடு, இந்தியாவின் ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் 80.9 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், தேசிய பன்முகத்தன்மை தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது.

முதலீட்டை ஈர்த்த திராவிட மாடல் ஆட்சி

2021-ல் ஆட்சி பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசால் கடந்த மூன்றாண்டுகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 12 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 2024ம் ஆண்டில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டுமே 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, அடுத்த 20 ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டிருக்கிறது மு.க.ஸ்டாலினின் அரசாங்கம். இவ்வாறு 2021ல் தொடங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் பன்முக வளர்ச்சியையும் பொதுநிதி வலுப்படுத்தலையும் சமூக நலன் பேணுதலையும் சீராக ஒருங்கிணைத்து, மு.க. ஸ்டாலின் அரசாங்கம் முன்னேற்றி வருகின்றது. இந்த அணுகுமுறை துறை சார்ந்த வல்லுநர்கள் பலரிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.

MK STALIN : 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த திமுக அரசு...இது சொல்லாட்சி அல்ல.. செயலாட்சி!- ஸ்டாலின் பெருமிதம்

click me!