நான் தோத்துட்டேன்... விக்னேஷ் சிவன் உடனான விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் நயன்தாரா போட்ட சோகமான பதிவு..!

First Published Mar 7, 2024, 1:48 PM IST

நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தோற்றுவிட்டதாக பதிவிட்டுள்ளதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர்.

Nayanthara

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, 40 வயதை நெருங்கினாலும் இன்றளவும் மவுசு குறையாமல் டாப் ஹீரோயினாக நீடித்து வருகிறார் நயன். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அவர் நடித்த ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், தற்போது நயனுக்கு இந்தியிலும் செம்ம டிமாண்ட் நிலவி வருகிறது. 

nayanthara Family

நடிகை நயன்தாரா தற்போது சசிகாந்த் இயக்கும் டெஸ்ட், யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கத்தில் உருவாகும் மண்ணாங்கட்டி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி என எக்கச்சக்கமான படங்களை லைன் அப்பில் அடுக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் நயன், பல்வேறு தொழில்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... அருந்ததி முதல் மஞ்சும்மல் பாய்ஸ் வரை... தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அக்கட தேசத்து படங்கள் இதோ

Vignesh shivan nayanthara

இப்படி சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா, அதில் தன் கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் இன்ஸ்டாவில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்தது சர்ச்சையாக வெடித்தது.

nayanthara Insta Story

இதனால் இருவருக்கும் இடையே சண்டையா என பேச்சு எழத் தொடங்கியது. ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை பற்றி எரியும் நிலையில், அதில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் விக்னேஷ் சிவனுடன் சண்டைபோட்டு இப்படி பதிவிட்டுள்ளாரா அல்லது இது ஏதேனும் விளம்பரத்திற்காக போடப்பட்ட பதிவா என்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... நிறைய குழந்தை பெத்துக்கணும்! அதனால் தான் இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. உடைந்து அழுத விஜய் டிவி பிரியங்கா!

click me!