Vijayakanth: கேப்டன் சார்பாக பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

First Published May 9, 2024, 9:53 PM IST

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.
 

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும், இந்திய குடியரசு தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

சுடர் மேல் பழி போட்டு பல்பு வாங்கிய மனோகரி! எழில் கொடுக்கும் சர்பிரைஸ்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
 

இதில் 5 பத்ம விபூஷன் விருதுகள், 17 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 110 பத்ம விருதுகள் என மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய கரங்களால் வழங்கினார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு இந்த உயரிய விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை பெற்றுக் கொள்ள தேமுதிக கட்சியின் பொது செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அவருடைய மகன் விஜய பிரபாகரனுடன் வந்திருந்தார். கேபட்டனுக்கு வழங்கப்பட்ட விருதினை கண்கலங்கியபடி பெற்றுக்கொண்டார் பிரேமலதா.

Raayan First Single: ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டல் இசையில்... தனுஷ் எழுதி பாடியுள்ள அடங்காத அசுரன் பாடல் வெளியானது!

முன்னதாக பத்ம பூஷன் விருது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்... "இன்று கேப்டனுக்காக பத்ம பூஷன் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்துள்ளோம். கேப்டன் இல்லை என்கிற மிகப்பெரிய மனவலி எங்களுக்குள் இருக்கிறது. இருந்தாலும் மத்திய அரசால் தரக்கூடிய, இந்த மிக உயரிய விருதை வாங்குவதில் ஒட்டுமொத்த தேசிய முற்போக்கு கழகமும் பெருமை அடைகிறோம். இந்த விருதினை கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்றாலும், கேப்டனுக்கு இந்த விருதினை நேரடியாக சமர்ப்பிக்க இருக்கிறோம். அது மட்டுமல்ல அவரை விரும்பிய அனைத் நல் உள்ளங்களுக்கும், தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கும், கேப்டன் கேப்டனுக்கு வழங்கப்பட்ட இந்த மிகப்பெரிய உயிரின் பத்மபூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்.

Premalatha Campaign

தொடர்ந்து பேசிய பிரேமலதா, விருது விழா முடிந்ததும் அமித்ஷா ஜி அவர்கள் வீட்டில் நைட் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று விருது வாங்கும் அனைவருக்குமே அங்கு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எங்களுடன் இங்கு டெல்லியில் இருக்கக்கூடிய செயலாளர் நாகராஜ் மற்றும் முகுந்தன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இது முடிந்த பின்னர் தமிழ் சங்கத்தின் சார்பாக விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடக்க உள்ளது.  பாராட்டு விழாவிலும் நாளை கலந்து கொண்டு நாளை மறுநாள் நாங்கள் சென்னைக்கு திரும்ப உள்ளோம் அங்கிருந்து கூட்டமாக சென்று சென்று கேப்டனின் கோவிலுக்கு சென்று அவரின் காலடியில் இதனை வைத்து அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vijay Deverakonda Net Worth: 35 வயதில் அசுர வளர்ச்சி.. விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

click me!