கோடையில் கல்லா கட்டும் கேன் வாட்டர் பிசினஸ்! சென்னையில் தினமும் 30 மில்லியன் லிட்டர் விற்பனை!

By SG Balan  |  First Published May 16, 2024, 8:50 AM IST

தமிழ்நாட்டில் தரச்சான்றிதழ் மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி ஆலைகள் செயல்படுகின்றன என்று கேன் விற்பனையாளர் சங்கத் தலைவர் ஷேக்ஸ்பியர் சொல்கிறார்.


சென்னையில், கோடை காலத்தில் குடிநீர் தேவைக்காக கேன் வாட்டர் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. தினசரி 30 மில்லியன் லிட்டர் குடிநீர் கேன்கள் விற்பனை ஆகின்றன என தமிழ்நாடு வாட்டர் கேன் விற்பனையாளர் சங்கம் கூறியுள்ளது.

சென்னையின் தினமும் 1300 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதில் குடிநீர் வாரியம் சார்பில் 1,040 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. தினமும் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 15 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 141 கன அடியும், பூண்டி ஏரியில் இருந்து 303 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 546 கன அடியும் நீர் எடுக்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 34.41 மில்லியன் லிட்டர் நீர் விநியோகிக்கப்படுகிறது. இதேபோல நெம்மேலியில் உள்ள பழைய நிலையத்தில் இருந்து 72.64 மில்லியன் லிட்டர், புதிய நிலையத்தில் இருந்து 85.38 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ரூ.50 ஆயிரம் முதலீடு 8 கோடியாக மாறும்! 8-4-3 ஃபார்முலா கேள்விபட்டிருக்கீங்களா?

ஆனாலும் அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் போதாமல் இருப்பதால் கேன் வாட்டர் விற்பனை கூடியிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு வாட்டர் கேன் விற்பனையாளர் சங்கத் தலைவர் ஷேக்ஸ்பியர் கூறுகையில், "கோடை காலத்தையொட்டி சென்னையில் கேன் வாட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, வெயில் காலத்திற்கு முன்பு தினசரி 20 மில்லியன் லிட்டர் வரை (2 கோடி லிட்டர்) விற்பனை செய்து வந்தோம். தற்போது 30 மில்லியன் லிட்டர் (3 கோடி லிட்டர்) வரை சிறியது முதல் பெரிய கேன்கள் வரை விற்பனையாகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு அதிகப்படியாக 20 லிட்டர் கேன்கள்தான் விற்பனை செய்யப்படுகிறது" என்று கூறியிருக்கிறார்.

"இதுதவிர, 300 எம்.எல், 500 எம்.எல் மற்றும் 1 லிட்டர் பாட்டில்கள் 25 லட்சம் வரை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறன. குறிப்பாக, குடியிருப்பு வீடுகளுக்கு மட்டும் 60 சதவீதம் வரை கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை என்பது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கி ஜூன் மாதம் இறுதிவரை மட்டுமே இருக்கும். மழைக்காலம் தொடங்கிவிட்டால் சராசரி நிலைக்கு திரும்பி விடும்." என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் இந்திய தரச்சான்றிதழ் மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றை அரசு முறைப்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த ஆலைகள் மூலம் பாதுகாப்பற்ற கேன் குடிநீரினால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், அதில் நடக்கும் நிலத்தடி நீர் சுரண்டலையும் தடுக்க முடியும்" எனவும் கேன் விற்பனையாளர் சங்கத் தலைவர் ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி பணத்தேவையா? பெஸ்டு ஆப்ஷன் பெர்சனல் லோன் வாங்குறதுதான்! ஏன் தெரியுமா?

click me!