மஞ்சு வாரியர் முதல் பிரசாந்த் வரை.. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர்கள் இத்தனை பேரா?

First Published Feb 4, 2024, 2:26 PM IST

ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.

Kandukonden Kandukonden

நடிகர் அஜித், மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபுவும், அப்பாஸுக்கு ஜோடியாகவும் ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் ஆகின. குறிப்பாக இப்படத்திற்காக ஷங்கர் மகாதேவன் பாடிய என்ன சொல்ல போகிறாய் என்கிற பாடல் இன்றளவும் பலரது பிளேலிஸ்ட்டில் ஒலித்துகொண்டிருக்கிறது. பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு முதல் தேசிய விருது கிடைத்ததும் இந்த பாடலுக்காக தான். தமிழ் சினிமாவில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக இருக்கும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏராளமான பிரபலங்கள் மிஸ் பண்ணி உள்ளனர். அதனை பற்றி பார்க்கலாம்.

Manju warrier, Soundarya, Aishwarya Rai

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டது நடிகை தபு தான். இதனால் அவரது கேரக்டருக்கு எவ்வித போட்டியும் இல்லை. அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் கேரக்டருக்கு முதன்முதலில் தேர்வானது மஞ்சு வாரியர் தான். கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகியதை அடுத்து நடிகை செளந்தர்யாவிடம் அந்த ரோலில் நடிக்க கேட்டுள்ளனர். அவரும் நோ சொன்ன பின்னர் இறுதியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு ஜோடியாக நடித்த பின்... ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோயின்ஸ் பற்றி பார்க்கலாம்

Prashanth, Ajith

அதேபோல் இப்படத்தில் அஜித்தின் மனோகர் கதாபாத்திரத்தில் நடிக்க முதன்முதலில் ராஜீவ் மேனன் அணுகியது நடிகர் பிரசாந்திடம் தானாம். ஆனால் அவர் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்ததால் அவருக்கு பதில் வேறு நடிகரை தேடியபோது, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித்தை சந்தித்து இந்த கதையை சொல்லி ஓகே பண்ணினாராம் ராஜீவ் மேனன்.

Mammootty, Arjun, Prabhu deva, Parthiban

இப்படத்தில் இடம்பெறும் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது மம்முட்டியின் மேஜர் பாலா கேரக்டர் தான். இந்த கேரக்டருக்காக முதலில் பிரபுதேவாவை அணுகினாராம் ராஜீவ் மேனன், அவர் சில காரணங்களால் விலகியதை அடுத்து பார்த்திபன், அர்ஜுன் ஆகியோரையும் பரிசீலனை செய்து பார்த்துள்ளார். ஆனால் அதுவும் செட் ஆகாததால் இறுதியாக மம்முட்டிக்கு அந்த ரோல் கிடைத்திருக்கிறது. அவரும் அதை வேறலெவலில் நடித்து அசத்திவிட்டார். இப்படி இத்தனை நடிகர், நடிகைகளை கடந்து தான் இந்த மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்திருக்கிறார் ராஜீவ் மேனன்.

இதையும் படியுங்கள்... படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சூர்யா மகள் கில்லி தான்... பதக்கம் வென்று பெற்றோருக்கு பெருமை சேர்த்த தியா

click me!