Thalapathy 67: தளபதி 67யை உறுதி செய்த பிரபல இயக்குநர்...படம் பக்கா கிளாஸாக இருக்கும்..வெளியான சூப்பர் அப்டேட்

First Published May 22, 2022, 11:10 AM IST

Thalapathy 67 Movie Update: விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

vijay lokesh kanagaraj

விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

vijay lokesh kanagaraj

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷ்னலான பேமிலி என்டர்டெயின்மென்ட் பபடமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

vijay lokesh kanagaraj

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். 

vijay lokesh kanagaraj

தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இந்த படத்தில் சரத்குமார் விஜய் தந்தையாக நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

vijay lokesh kanagaraj

இதனிடையே தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வந்தது. அதன்படி அப்படத்திற்காக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Lokesh Kanagaraj

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான தளபதி 67யை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக, அவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ''தளபதி 67 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும், அது வரைக்கும் பொறுத்துக்கோங்க, படம் பக்கா கிளாஸ் & மாஸாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் விக்ரம் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கிறார். இதனால், விஜய் பிறந்தநாளில் இதன் (ஜூன்22) அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் படிக்க....தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்...மதுரை தம்பதியர் பரபரப்பு விளக்கம்...என்ன இப்படி சொல்லிட்டாங்க?

click me!