சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி டேவிஷா ஷெட்டியின் ஃபர்ஸ்ட் மீட்டிங் எப்போது தெரியுமா?

First Published Jan 8, 2023, 3:07 PM IST

டி20 போட்டியிலும், ஒரு நாள் போட்டியிலும் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இதுவரையில் டெஸ்ட் போட்டியில் மட்டும் அறிமுகமாகவில்லை.

சூர்யகுமார் யாதவ்

கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். 

IND vs SL 3rd T20 Match: 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்து!

அசோக்குமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்வின் தந்தை அசோக்குமார் யாதவ் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரிகல் பொறியாளராக பணியாற்றியதன் காரணமாக உத்திரப்பிரதேசத்தின் காஜிபூர் பகுதியிலிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளார். சூர்யகுமார் யாதவ்வின் தாயார் ஸ்வப்னா யாதவ் (ஹவுஸ் வைப்). சூர்யகுமார் யாதவ்விற்கு ஒரேயொரு சகோதரி தான். அவரது பெயர் ஃபைனெல் யாதவ்.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

சூர்யகுமார் யாதவ் பி.காம்:

மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்த சூர்யகுமார் யாதவ், கடந்த 2012 ஆம் ஆண்டு அங்கேயே ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் படிப்பில் சேர்ந்துள்ளார்.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

ஒரே கல்லூரி:

இவர் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், அதே கல்லூரியில் டேவிஷாவும் 12 ஆம் வகுப்பு முடித்த கையோடு கல்லூரிக்கு சென்றுள்ளார். அதுவும் சூர்யகுமார் யாதவ் படிக்கும் அதே கல்லூரி. அப்போது தான் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர். சூர்யகுமார் யாவிற்கு 22 வயதான போது, டேவிஷாவிற்கு 19 வயதாகியுள்ளது.

கிரிக்கெட்:

குழந்தை பருவம் முதலே பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சூர்யகுமார் யாதவ் தந்தையின் ஆலோனையின் படி அவர் கிரிக்கெட் விளையாட்டில் சேர்ந்துள்ளார்.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

திலிப் வெங்சர்க்கார் கிரிக்கெட் அகாடமி:

அதன் பிறகு மும்பையில் உள்ள திலிப் வெங்சர்க்காரின் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து கிரிக்கெட்டுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.

2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா: டிராவில் முடிந்த 3ஆவது டெஸ்ட்!

ரஞ்சி டிராபி போட்டி: இரட்டை சதம்

கடந்த 2010 - 11 ஆம் ஆண்டுகளில் நடந்த ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணியில் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். 

IND vs SL 3rd T20 Match: 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்து!

ஐபிஎல் அறிமுகம்:

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் அறிமுகமாகியுள்ளார். இது தான் சூர்யகுமார் யாதவ்வின் ஐபிஎல் அறிமுகம்.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

ஐபிஎல் சீசன்: மும்பை அணி!

கடந்த 2008, 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை. 2012 ஆம் ஆண்டு மும்பை அணியில் இடம் பெற்ற அவர், 2013 ஆம் ஆண்டு விளையாடவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

16ஆவது ஐபிஎல்: மும்பை அணி

இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார். 2023 ஆம் ஆண்டு நடக்கும் 16ஆவது ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

டி20 போட்டி

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஒரு நாள் போட்டி

இதே போன்று கடந்த 2021 ம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகமானார். ஆனால், இதுவரையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண நிச்சயதார்த்தம்:

கடந்த 2016 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி டேவிஷாவுக்கும், சூர்யகுமார் யாதவ்விற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

சூர்யகுமார் யாதவ் திருமணம்

இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி டேவிஷா ஷெட்டிக்கும், சூர்யகுமார் யாதவ்விற்கும் திருமணம் நடந்தது.

டேவிஷா ஷெட்டி

டேவிஷா மும்பையில் நடன பயிற்சியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். விலங்குகள் மீது தீவிர பற்று கொண்டவர். தனது நடன திறமையால் சூர்யகுமாரின் இதயத்தில் குடி கொண்டாள். 

டி20 போட்டி

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். 

டி20 போட்டியில் 3 சதம்:

இதே போன்று அதே போன்று நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 

click me!