தொட்டியின் இடத்தை மாற்றிப் பார்க்கலாம். கோடையில், நேரடி சூரிய ஒளியால் தொட்டியில் உள்ள நீர் வெப்பமடைகிறது. எனவே தொட்டியின் மீது சூரிய ஒளி படாதபடி தொட்டியின் இடத்தை நிழல் உள்ள இடத்தில் வைக்கலாம்.
தண்ணீர் தொட்டியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தண்ணீர் தொட்டியை கோன் பை கொண்டு மூடலாம். பின் தார்பாய் வைத்தும் மூடலாம். இது தொட்டியில் உள்ள தண்ணீரை ஓரளவு குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தொட்டியின் அடிப்பகுதியில் சேற்றை நிரப்பி அதன் மேல் தொட்டியை வைக்கலாம். அதன் மூலமும் தண்ணீரை சற்று குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.