கோடையிலும் உங்க வீட்டு Tank தண்ணி சில்லுனு இருக்க இதை மட்டும் பண்ணுங்க!

Published : Apr 29, 2024, 02:37 PM ISTUpdated : Apr 29, 2024, 02:44 PM IST

கோடையில் உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்..  

PREV
16
கோடையிலும் உங்க வீட்டு Tank தண்ணி சில்லுனு இருக்க இதை மட்டும் பண்ணுங்க!
water tank

கோடை காலத்தில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் காரணமாக தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், சில எளிய முறைகளின் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக்கலாம். 

26

வெள்ளை பெயிண்ட்: பொதுவாகவே கருப்பு நிற தண்ணீர் தொட்டியை விட வெள்ளை நிற தண்ணி தொட்டி தான் மிகவும் சிறந்தது. ஏனெனில், கருப்பு நிறம் வெப்பத்தை வேகமாக உறிஞ்சுகிறது. இதன் காரணமாக தொட்டி விரைவாக வெப்பமடைகிறது. எனவே, உங்கள் வீட்டில் கருப்பு தொட்டி இருந்தால் அதன் மீது வெள்ளை பெயிண்ட் பூசவும். இதனால் தொட்டியில் உள்ள நீர் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.

36

கவர் பயன்படுத்துங்கள்: தொட்டி மட்டுமின்றி, குழாய்களின் காரணமாகவும் தண்ணீர் சூடாகிறது. அத்தகைய சூழ்நிலையில், சூரிய ஒளியில் இருந்து குழாயைப் பாதுகாக்க கவர் பயன்படுத்தலாம். அதற்கான கவர்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. எனவே,  குழாய் மீது ஒரு கவர் போட்டு மூடினால், தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

46

தொட்டி இடத்தை மாற்றுங்கள்: கோடை காலத்தில், தொட்டி சூரிய  ஒளி படும் இடத்தில் நேரடியாக இருப்பதால்,  அதிலிருக்கும் தண்ணீர் சூடாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தண்ணீர் தொட்டியை சூரிய ஒளி தொட்டியின் மீது விழாத இடத்தில் வையுங்கள்.

இதையும் படிங்க:  பெங்களூரு தண்ணீர் பற்றாக்குறை.. விதியை மீறிய குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த அரசு - எவ்வளவு அபராதம் தெரியுமா?

56

கோணிப் பை: சூரிய ஒளியிலிருந்து தண்ணீர் தொட்டியை பாதுகாக்க முதலில் கோணி பையை வைத்து தண்ணீர் தொட்டியை மூடுங்கள். பிறகு அதன் மீது தார் பாலின் போட்டு மூடுங்கள். இதனால் தொட்டியில் இருக்கும் தண்ணீர் ஓரளவு குளிர்ச்சியாக இருக்கும்.

இதையும் படிங்க: Bengaluru Water Crisis : பெங்களூரு தண்ணீர் நெருக்கடி.. ஒர்க் ஃபிரம் ஹோம் கேட்கும் 15 லட்சம் ஐடி ஊழியர்கள்..

66

மண்: அதுபோல, தொட்டிக்கு அடியில் மண்ணை நிரப்பி அதன் மேல் தொட்டியை வைத்தால், தண்ணீர் ஓரளவு குளிர்ச்சியாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories