ஏசி இல்லாமலேயே அறையை குளுகுளுவென்று மாற்றலாம்! இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

First Published | Apr 27, 2024, 10:33 PM IST

கோடை காலத்தில் குளிர்ச்சியைத் தேடுபவர்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏசியை ஓடவிட்டு இளைப்பாருகிறார்கள். ஆனால் ஏசி வாக்கும் அளவுக்கு வசதி இல்லாத மக்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. அவர்கள் ஏசி இல்லாமலே வீட்டு அறையைக் குளிர்ச்சியாக்க முடியும். அதற்கு அவர்கள் செய்யவேண்டிய ஈசியான டிப்ஸ் இதோ...

Ceiling fans

ஈ.சி. இல்லாத வீட்டில் மின்விசிறி இருக்கும். ஏசி இல்லாத வீடுகளில் சீலிங் ஃபேன் பயன்படுத்தி அறையைக் குளிர வைக்கலாம். மின்விசிறி குளிர்ந்த காற்றை கீழ்நோக்கி நகர்த்த உதவுகிறது. இதன் மூலம் அறையில் குளிர்ச்சியை உணர வைக்கிறது.

Exhaust fan

சாதாரண மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்ஸ்ஹாஸ்ட் மின்விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இந்த எக்ஸ்ஹாஸ்ட் மின்விசிறிகள் பயன்படுத்தப்படும். எக்ஸாஸ்ட் ஃபேன்கள், ஏசி இல்லாமல் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

Latest Videos


Use Curtains

திரைச்சீலைகள் மூலம் சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம். வெளிர் நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை கிட்டத்தட்ட 40% குறைக்க உதவும். கண்ணாடி ஜன்னல்களும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

Natural Ventilation

இயற்கையான காற்றோட்டம் இருப்பதற்கு வேண்டியதைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உங்கள் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்திற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

Cool Water with Fan

அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின்விசிறியை ஓட விடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி அறைக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல உதவும்.

Air cooler

ஏசி இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம். சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படுகிறது.

Croton

அறையில் சில தாவரங்களை வைத்து வளர்க்கலாம். தாவரங்கள் அறையை குளிர்விக்க உதவுகின்றன, ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன; சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனையும் கொடுக்கின்றன.

LED lights

அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்ஈடி விளக்குகளை பயன்படுத்தலாம்.

click me!