விடிய விடிய ஏசி ஓடினாலும் கரண்ட் பில் ஏறாது.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Published : Apr 11, 2024, 03:44 PM IST

இந்த வெயில் காலத்தில் ஏசி விடிய விடிய ஓடினாலும் சில சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் கரண்ட் பில்லை குறைக்க முடியும். 

PREV
16
விடிய விடிய ஏசி ஓடினாலும் கரண்ட் பில் ஏறாது.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வீடுகளில் ஏசி, ஏர் கூலர் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசி அதிகமான மின்சாரத்தை நுகர்வதால் கரண்ட் பில்லும் அதிகமாகவே வரும். ஆனால் சில சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் கரண்ட் பில்லை குறைக்க முடியும். 

26

ஆம். ஏசியை மிகவும் குறைவான் வெப்பநிலையில் வைக்காமல் 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது. மனித உடலுக்கு தேவையான வெப்பநிலை 24 டிகிரி என்பதால் 24 டிகிரி என்ற அளவிலேயே வெப்பநிலையை வைப்பது நல்லது. இதனால் கரண்ட் பில்லை மிச்சப்படுத்தலாம்.

36

ஏசியை சர்வீஸ் செய்து பயன்படுத்துவதன் மூலம் ஏசி நன்றாக வேலை செய்யும். இதன் மூலமும் கரண்ட் பில்லை குறைக்க முடியும். ஏசியின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் பில்டரில் தூசு இருந்தால் அது ஏசியின் குளிரூட்டும் திறனை குறைக்கலாம். 

46

அதே போல் ஏசியை பயன்படுத்தும் போது ரூம், கதவு, ஜன்னல் ஆகியவை நன்றாக மூடி இருக்கிறதா என்பது உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அனல் காற்று உள்ளே வந்தால் ஏசியால் அந்த அறை குளிர்ச்சியாக நேரம் ஆகலாம். ஆனால் கதவு ஜன்னல் மூடியிருப்பதை உறுதி செய்வதாலும் கரண்ட் பில்லை மிச்சப்படுத்த முடியும். 

56
air conditioner

சிலருக்கு ஏசி போடும் போது சீலிங் ஃபேனையும் போடலாமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் ஏசியை பயன்படுத்தும் போது ஃபேனை பயன்படுத்துவதால் குளிர்காற்று அந்த அறையின் மூலை முடுக்கிலும் வேகமாக சென்றடையும். இதன் மூலம் கரண்ட் பில் மிச்சமாகும்.

 

66

ஏசியில் இருக்கும் டைமரை ஆன் செய்வது நல்லது. இதனால் அறை குளிர்ச்சியான உடன் ஏசி தானாவே ஆஃப் ஆகிவிடும். இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories