Health Tips : இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க! அதிர்ச்சி விளைவுகள்!!

First Published Apr 11, 2024, 1:48 PM IST

இத்தொகுப்பில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
 

சிக்கன் : சிக்கனை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அதில் இருக்கும் புரதச்சத்து மேலும் அதிகரித்து, அது  ஃபுட் பாய்சானாக மாற வாய்ப்பு அதிகம்.

முட்டை : முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. எனவே, அதை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிட்டால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும்.

கீரை : கீரையில் நைட்ரேட்ஸ் உள்ளது. மீண்டும் சூடு படுத்தும் போது அது நைட்ரைட்டாக மாறிவிடும். இவை புற்று நோயை உண்டாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

காளான் : காளானை மீண்டும் சூடு படுத்தும் போது அது விஷமாக மாறும். இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும்.

இதையும் படிங்க:  முட்டை சாப்பிட்ட உடன் எக்காரணம் கொண்டும் 'இதை' சாப்பிடாதீங்க..! மீறினால் ஆபத்து..!!

சாதம் : சாதத்தை மீண்டும் சூடு படுத்தினால் அதில் இருக்கும் நார்ச்சத்து தன்மை அதிகரிக்கும். அதை சாப்பிட்டால் ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

இதையும் படிங்க: Ragi Benefits : காலை உணவாக ராகியை சாப்பிடுங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!!

எண்ணெய் : எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அதன் அடர்த்தி அதிகரிக்கும். இதனை பயன்படுத்தினால் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!