இப்ப கோடிக்கணக்கில் வருமானம்.. ஆனா நீதா அம்பானி வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Mar 15, 2024, 11:19 AM IST

ஆசிரியையாக வேலை செய்த போது நீதா அம்பானி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம். தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான வணிக முயற்சிகள், ஆடம்பர கொண்டாட்டங்கள் ஆகியவை காரணமாக அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் நிறுவனராக இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர், நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தை (NMACC) தொடங்குவது வரை, நீதா அம்பானி பல ஆண்டுகளாக பல தொழில்முறை மைல்கற்களை எட்டியுள்ளார்.

Tap to resize

nita ambani

இருப்பினும், முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு எளிய பள்ளி ஆசிரியராக இருந்தார் நீதா... மும்பையில் உள்ள ஒரு நடுத்தர வர்க்க குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த நீதா, சன்ஃபிளவர் நர்சரியில் பள்ளி ஆசிரியையாக இருந்தார். அப்போது நீதா அம்பானி வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆசிரியையாக வேலை செய்த போது நீதாவின் சம்பளம் வெறும் ரூ. 800 தானாம். சிமி கரேவாலுடன் ரெண்டெஸ்வஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் முகேஷ் அம்பானி உடன் நீதா பங்கேற்ற போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தனது முதல் வேலையான ஆசிரியை வேலை குறித்து பேசினார். அதில் “ சன்ஃபிளவர் நர்சரி பள்ளியில் எனக்கு மாதம் ரூ. 800 சம்பளம் கிடைத்தது." என்று நீதா கூற,  அதற்கு முகேஷ், “அந்த சம்பளம் அனைத்தும் என்னுடையது. என்று கூறினார். ஆசிரியை பணி தனக்கு நிறைய திருப்தியைக் கொடுத்ததாக நீதா தெரிவித்தார்.

முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும், மூன்று வார காதலுக்குப் பிறகு, 1985ல் திருமணம் செய்துகொண்டனர்.. முகேஷ் அம்பானியுடன் திருமணத்திற்குப் பிறகு, நீதா அம்பானி பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். முகேஷ் அம்பானியை திருமணம் செய்வதற்கு முன்பு  தனது ஆசிரியை பணியை தொடருவே என்று நீதா நிபந்தனை வைத்தாராம். நீதா அம்பானி நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நீதா அம்பானி நியமிக்கப்பட்டார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 2022-2023 ஆண்டு அறிக்கையின்படி, நிதா அம்பானிக்கு ரூ.6 லட்சம் அமர்வுக் கட்டணமும், ரூ.2 கோடி லாப அடிப்படையிலான கமிஷனும் வழங்கப்பட்டது.

Latest Videos

click me!