Jovika: நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கிய வனிதா மகள்! குட்டை உடையில் சிங்கப்பூரில் சிறகடிக்கும் ஜோவிகா!

First Published Apr 29, 2024, 10:36 PM IST

வனிதா மகள் ஜோவிகா, கவர்ச்சி உடையில்... சிங்கப்பூரின் அழகை ரசிக்கும் ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு மூத்த மகளாக பிறந்தவர் தான், வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா, ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம், போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர், ஆகாஷ் என்பவரை தன்னுடைய 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பின்னர் சில வருடங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், ஜோவிகா பிறந்த கையேடு ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆகாஷ் சமுத்திரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொழிலதிபராக இருந்து வருகிறார். 

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லரான 'ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' பட ரிலீஸ் தேதி இதோ!

முதல் கணவரை விவாகரத்து செய்த கையேடு, ஆனந்த் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட வனிதா, அவருடன் குடும்பம் நடத்தி ஜெயனித்தா என்கிற பெண் குழந்தையை பெற்றெடுத்த சில வருடங்களில் அவரிடம் இருந்தும் பிரிந்தார். இதை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ராபட்டுடன் காதல், பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம் என, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது இவரது வாழ்க்கை.

வனிதாவின் வாழ்க்கையில் பல ட்ராஜெரி இருந்தாலும்... தன்னுடைய மகள்கள் இருவரையும் அவர்கள் ஆசை படும் துறையில், பெரிய ஆளாக மாற்ற வேண்டும் என தற்போது வரை போராடி வருகிறார்.

Ethirneechal: சபாஷ்.. நச்சுனு கேள்வி எழுப்பிய ஞானம்! விசாலாட்சியை கோர்த்து விட்ட ஜனனி? எதிர்நீச்சல் அப்டேட்!

வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தால், தன்னுடைய சிபாரிசு மூலம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார். பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கவில்லை என்றாலும்... யாருக்கும் மரியாதை கொடுக்காதவர் ஜோவிகா என சில அவர்பெயரோடு வெளியேறினார்.

இயக்குனர் பார்த்திபன் இயக்கி உள்ள டீன்ஸ் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ள ஜோவிகா, விரைவில் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாப்போல் அடிக்கடி விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Amala Paul: வயிற்றில் நிறைமாத குழந்தையோடு.. டைட்டான கவர்ச்சி உடையில் அமலா பால் நடத்திய ஃபர்ஸ்ட் போட்டோ ஷூட்!

தற்போது ஜோவிகா, தன்னுடைய விடுமுறை நாட்களை கழிக்க சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில்... அங்கு குட்டை உடையில் இவர் எடுத்து கொண்ட போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!