Asianet News TamilAsianet News Tamil

IND vs SL 3rd T20 Match: 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்து!

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டுவிட்டரில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Cricket Celebrities wishes Team India for its victory against Sri Lanka third T20 Match
Author
First Published Jan 8, 2023, 10:57 AM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. இதில், இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டியில் தனது 3ஆவது சதத்தை சூர்யகுமார் யாதவ் பூர்த்தி செய்துள்ளார்.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

அதோடு, டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் 2ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 48 பந்துகளில் சூர்யகுமார் சதம் அடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 49 பந்துகளில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இதுவரையில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த 29 டி20 போட்டிகளில் இந்திய அணி 19 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கும், சூர்யகுமார் யாதவிற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios