Asianet News TamilAsianet News Tamil

2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா: டிராவில் முடிந்த 3ஆவது டெஸ்ட்!

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

The 3rd Test ended in a draw and Australia won the series against South Africa
Author
First Published Jan 8, 2023, 12:56 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.

IND vs SL 3rd T20 Match: 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்து!

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 475 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 131 ஓவர்கள் வரை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. இதில், கவாஜா 195 ரன்கள் (நாட் அவுட்), ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள் மற்றும் ஹெட் 70 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

இதையடுத்து, பாலோ ஆனை தவிர்க்க 21 ரன்கள் பிந்தைய நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், சரெல் எர்வீ 42 ரன்கள் (நாட் அவுட்) எடுத்து ஆடிய வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்த போது இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருதும், உஸ்மான் கவாஜாவுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios